Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlsirCJdDKfK4ldOfMRt2M5NnFr_eXJ_rvwzEtyhVd2pjtz56Bni8Se3Ylkne_FQJIjLa2mgmgsLQRI-AidcyIyQ_Zn0szaIizlzOmb9djNa_Eg2pTmPC6E3o_t-fzxyHh-0kM2OO_7mU/s1600/1716972108719744-0.png)
Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்! காசாவின் ரஃபா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலில், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்ததுள்ளனர். ஏராளமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துவருகிறது. ஆனாலும் போரை தொடரப் போவதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'ALL EYES ON RAFAH' என்ற போஸ்டர் சமூக வலை தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 2.9 கோடி பேர் பகிர்ந்துள்ளனர். சானியா மிர்சா, த்ரிஷா, சமந்தா, துல்கர் சல்மான், அட்லீ, ஹன்சிகா உள்ளிட்ட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பிரபலங்கள் என பலரும் இதனை பகிர்ந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ...