Posts

Showing posts from October, 2022

தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனின் வெற்றி

Image
சாதிக்கவேண்டும் என்ற சபதம் இருக்கிறது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது. வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற  தாகம் இருக்கிறது. வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது. உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது. தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது. அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது. தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது. சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது. விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது. அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது. குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது. கடமைகள் ...

மகனுக்கு ஒரு தந்தையின் அறிவுரை

Image
தன் தந்தையின்  மரணத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த மன்னன்  ஒருவன் வயது முதிர்ந்தவர்கள் இந்த பூமிக்கு பாரம் என எண்ணி அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டான். தன் தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு இளைஞன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக தன் வீட்டின் கீழே ரகசிய அறையில்  அவரைத் தஙக வைத்தான். சில நாட்களுக்குப் பின், ஒற்றர்கள் மூலமாகவோ அல்லது காட்டி கொடுப்பவர்கள் மூலமாகவோ மன்னனுக்கு இந்த தகவல் தெரிந்து விட்டது. அந்த இளைஞனை விசாரித்து விட்டு அவனைத் தண்டிக்கவும் அவன் தந்தையை கொல்லவும் விரும்பியவன் ,அந்த இளைஞனை காலால் நடந்தவனாகவும் ஏறியவனாகவும் வரச் சொல்  என ஆணையிட்டான் ஒரே நேரத்தில் எப்படி வாகனத்தில் ஏறிய வண்ணமும் நடந்தும் வர முடியும் என தந்தையிடம் கேட்டான். தந்தை சொன்னார்:  ஒரு குச்சியை   ஒரு காலில் கட்டிக்கொண்டுஅதை ஊன்றிக் கொண்டும் மற்றொரு காலால் நடந்தும்செல் என்றார்.  அவ்வாறே அவன் மன்னனின் முன் சென்றான் அவனுடைய புத்திசாலித்தனத்தை கண்ட மன்னன் நாளை காலனி அணிந்தும்  வெறுங்காலுடனும் நடந்து வரவேண்டும் என உத்...