மகனுக்கு ஒரு தந்தையின் அறிவுரை

தன் தந்தையின்  மரணத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த மன்னன்  ஒருவன் வயது முதிர்ந்தவர்கள் இந்த பூமிக்கு பாரம் என எண்ணி அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டான்.

தன் தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு இளைஞன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக தன் வீட்டின் கீழே ரகசிய அறையில்  அவரைத் தஙக வைத்தான்.

சில நாட்களுக்குப் பின், ஒற்றர்கள் மூலமாகவோ அல்லது காட்டி கொடுப்பவர்கள் மூலமாகவோ மன்னனுக்கு இந்த தகவல் தெரிந்து விட்டது.
அந்த இளைஞனை விசாரித்து விட்டு அவனைத் தண்டிக்கவும் அவன் தந்தையை கொல்லவும் விரும்பியவன் ,அந்த இளைஞனை

காலால் நடந்தவனாகவும் ஏறியவனாகவும் வரச் சொல்  என ஆணையிட்டான்

ஒரே நேரத்தில் எப்படி வாகனத்தில் ஏறிய வண்ணமும் நடந்தும் வர முடியும் என தந்தையிடம் கேட்டான்.

தந்தை சொன்னார்: 
ஒரு குச்சியை   ஒரு காலில் கட்டிக்கொண்டுஅதை ஊன்றிக் கொண்டும் மற்றொரு காலால் நடந்தும்செல் என்றார். 
அவ்வாறே அவன் மன்னனின் முன் சென்றான்

அவனுடைய புத்திசாலித்தனத்தை கண்ட மன்னன் நாளை காலனி அணிந்தும்  வெறுங்காலுடனும் நடந்து வரவேண்டும் என உத்திரவிட்டான்
இது எப்படி சாத்தியமாகும் என அவன் தந்தையிடம் கேட்க அவனுடைய ஷூ வடிவிலான காலணியின் கீழ்ப்பகுதியை எடுத்து விட்டு அணிந்து போகச் சொன்னார். 

அந்நிலையில் காலணியை அணிந்திருந்தாலும்அவனின பாதம் தரையில் பட்டதால் வெறுங்காலுடன்  நடந்ததைப் போன்றிருந்தது

அதைப் பார்த்த மன்னன் அவனின் புத்திக் கூர்மையைக் கண்டு அவன் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 
நாளை, உன்னுடன் இருக்கும் எதிரியையும்  விசுவாசமுள்ள நண்பனையும் அழைத்து வா என்றான்.

இது தொடர்பாக, தந்தையுடன் ஆலோசனை செய்தான்.

 நாளை உன் மனைவியையும் உன் வளர்ப்பு நாயையும் அழைத்து சென்று மன்னர் முன் அவர்களை அடி என்றார்.

அப்பொழுது என்ன நடக்கும் என்றான் மகன்.என்ன நடக்கும் என்பது அப்பொழுது உனக்குக் தெரியும் என்றார் தந்தை.
அவனும் மன்னனின் முன் நாயையும் மனைவியையும் அடித்தான் நாய் கத்திக் கொண்டே அவனை விட்டும் சற்றுத் தள்ளிப் போய் நின்றது.
அடிவாங்கிய மனைவியோ கடுங் கோபத்துடன் மற்றவர்கள் முன் என்னை அடிக்கிறாயா? என்ன நடக்கிறது என்று பார் என  அலறிய வண்ணம் மன்னா! இவன் வீட்டு ரகசிய அறையில் அவனின் தந்தையை ஒளித்து வைத்துள்ளான் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

மன்னன்,"எதிரியைக் காட்டிவிட்டாய், விசுவாசம் உள்ள நண்பன் எங்கே? எனக் கேட்டான்.
அந்த இளைஞன் அவனிடமிருந்து விலகி தள்ளி நின்று கொண்டிருந்த நாயை அழைத்தான்அந்நாய் தன் வாலை ஆட்டிக் கொண்டு வேகமாக அவன் அருகே வந்து அவனின் காலில் தனது முகத்தைத் தேய்த்தது

மன்னா! நான் அடித்தாலும் நான் கூப்பிட்டவுடன் ஓடிவருகிறதே இதுதான் எனது விசுவாசமிக்க நண்பன்" என்றான் இளைஞன்.
இளைஞனின் புத்திசாலித்தனமும் பண்பட்ட நடைமுறையும் மன்னனைப் பெரிதும் கவர  இவ்வளவு திறமைகளை யாரிடம் கற்றாய் எனக்கேட்டார்

எல்லாமே என்தந்தையிடமிருந்து தான் மன்னா!எனக்கு குரு வழிகாட்டி எல்லாமே அவர்தான் என உருக்கமுடன் கூறினான்
மனம் நெகிழ்ந்த மன்னன் நாளை உன் தந்தையை அழைத்து வா என்றான்.

மறுநாள் வந்த தந்தையிடம் அரசியல் தொடர்பான சில கேள்விகளைக் கேட்டு தனது ஆலோசகராக நியமித்ததுடன் முதியவர்களை கொலை செய்யும் ஆணையையும் நீக்கியதுடன் இளைஞனுக்கும் பல வெகுமதிகளையும் வழங்கினான்.

நீதி: தந்தை ஒரு குடும்பத்தினருக்கு  கிடைத்த பொக்கிஷம். 
அவர் அனுபவத்தின் பல்கலைகழகம்.
தன் தந்தையின் ஆலோசனைப் படி நடந்த காரணத்தினால் அந்த இளைஞன் உயர்வு பெற்றான்

தந்தை முதியவர் என்பதற்காகப் புறக்கணிக்காதீர்.அவரிடம் உங்கள் பிரச்சினையைப் பேசிப்பாருங்கள் நீங்கள் எதிர்பார்க்காத  பல யுக்திகள்  உங்களுக்குக் கிடைக்கும்.
பெற்றோர்களைப் பேணுங்கள்

உங்களது இறைவன் தன்னைத் தவிர மற்றெவரையும்வணங்கக்கூடாதென்று கட்டளையிட்டிருப்பதுடன்
தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான்.
 உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்ட போதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

Eid al-Adha 2021

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு