ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு
நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டி யில் வருகின்ற 27.02.2024 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை யொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி நடை பெறும் இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி, (25.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு
இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டி யில் வருகின்ற 27.02.2024 செவ்வாய் க்கிழமை அன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து வருவாய் துறை, பொதுப் பணித் துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள்அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து தகுதி சான்று மற்றும் அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், சுகாதாரத் துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு, போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி என சான்றளிக்கவும், பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், காளைகள் போட்டியின் போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகளுடன் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப் படும்போது வருவாய்த்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக் கான வழிகாட்டு நெறிமுறைகள் பின் பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணி யாற்றிட வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன்
சேலம் வட்டாட்சியர் தாமோதரன் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், கண்காணிப்புக் குழுவினர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
Comments
Post a Comment