வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

ஏக இறைவனின்திருப்பெயரால்...
ஆண்களுக்கு தொப்பியும், தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்...

திருடக் கூடாது... பொய் சொல்லக் கூடாது... லஞ்சம், ஊழல் கூடாது... கடத்தல் கூடாது... வட்டி கூடாது... பதுக்கல் வியாபாரம் கூடாது... பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது... நம்பிக்கைத் துரோகம் கூடாது... பிறரை ஏமாற்றக் கூடாது... பிறர் குறை பேசக் கூடாது... பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது... பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது... அனாதைகளை விரட்டக் கூடாது... ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது... பிறரை வம்பிழுக்கக் கூடாது...     எவரையும்     கொல்லக் கூடாது... எவரையும் தூற்றித் திரியக் கூடாது... எவர் மீதும்  தப்பெண்ணம் கூடாது... கடும் வார்த்தைப்பிரயோகம் கூடாது... எவர் மீதும் அபாண்டம் சுமத் தக் கூடாது,   எவரையும் துன்புறுத்தக் கூடாது... பெரும்   சிரிப்புக்     கூடாது பெருமை கூடாது... பேராசை  கூடாது.. ஆடம்பரம் கூடாது...  ஆணவம்,   அகம் பாவம் கூடாது... ஆட்டம்போடக்கூடாது எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது பிறர் விஷயத்தில்தேவையில்லாமல்  நுழையக் கூடாது...  அனுமதியின்றி பிறர் வீடு   புகக் கூடாது...எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது..எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது... பூமியில் கர்வ மாக நடக்கக் கூடாது...கோபம்கூடாது பொறுமை இழக்கக் கூடாது , கஞ்சத் தனம் கூடாது...   எவரையும் அலைக் கழிக்கக் கூடாது,அபயமளிக்க மறுக் கக்கூடாது,... பிறர்   மனம்   புண்படக் கூடாது,    ஒழுக்கம்   தவறக்  கூடாது. அசுத்தமாக இருக்கக்    கூடாது பெற் -றோரையும்  நிந்திக்க கூடாது. உறவு   -களை  துண்டிக்கக்  கூடாது...  வீண் குழப்பங்களை   உண்டு     பண்ணக் கூடாது... போதைப்பொருள் பாவனை விற்பனை கூடாது...

இஸ்லாம்கூறும்இதுபோன்றஎழுநூறு கட்டளைகளையும் புறந்தள்ளிவிட்டு வெறுமனேவெளித்தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை...
ரசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணி - -யில்   முதன்மையானது  அன்னாரது நற்பண்புகளே..அதைப் பார்த்த பிறகு தான் மக்கள் அலை, அலையாக இஸ்லாத்தை ஏற்றனர்.

அதுவே இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவிய காரணமாக அமை ந்தது. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்...

எனவே பிறருக்கு முன்   மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக மற்றும் சிறந்த மனிதனாக வாழ, அல்லாஹ்எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக...

ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்...

குறிப்பு : இதை நீங்கள் மட்டும்பார்த்து அதோடு    நிறுத்தி   விடாமல்  உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்ப ர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள்... அனைவரும்  அறிந்து கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்