ஆசிரியர்கள் வயிற்றில் பால்வார்த்த தமிழக அரசு அதிமுக அரசு எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் தூக்கியடித்து உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு...
ஊதிய உயர்வு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளைவலியுறுத்திஆசிரியர்கள்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் மீது கடந்த ஆட்சியில் ஏராளமான வழக்குகள் தொடுக்கபபட்டதுடன் ஒழுங்கு நடவடிக்கையும்மேற்கொள்ளப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரி யர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். இந்த நிலையில் ஆசிரியர்கள், கல்வி துறை பணியாளர்கள் மீதானஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
17B பிரிவின் கீழ் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்து, பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை கல்வித் துறை கோரியிருந்த நிலையில், தற்போது அவற்றை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட நாள்கள் அடிப்படையில் பணிக்காலத்தை முறைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த நடவடிக்கை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்து மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
Comments
Post a Comment