தாசில்தார் சுமதி தலைமையில் பிண்ணணூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuXuOQh09zcnmZYjgNErUBgkxOzodbjQmjCYXARs6vzNffc79n4P1t0viQkZgxMQB099xJCvgS9poTDjIh5XQc2-u2EzgNpq2Lc15hFfmpVlaa0cLG9-674duf69Ax2fMzlVGbKkWaNBw/s1600/1646038864707815-0.png)
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் பிண்ணனூர் கிராமம்,சர்வே எண்- 111/1 விஸ்தீரணம் 3.81.5 ஹெக்டேர் அரசு புறம்போக்கு தரிசு வாரி என வகைப்பாடு செய்யப்பட்ட நிலத்தில் சுமார் 0.40.5 ஏர்ஸ் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்தது. மேற்படி ஆக்கிரமிப்பு தலைவாசல் வட்டாட்சியர் திருமதி சுமதி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது இந்நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார் வீரகனூர் வருவாய் ஆய்வாளர் அழகேசன் கவர்பனை கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி கிராம உதவியாளர் ர.ராமசாமி ஆகியோர் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.