Posts

Showing posts from August, 2023

Do you know about Villupuram Veeramuthuvel, the protagonist of Chandrayaan-3 project?

Image
As the Chandrayaan-3 Vikram lander landed on the South Pole of the Moon yesterday evening and created history, let's take a look at Veeramuthuvel from Villupuram who was the mastermind of this project. Scientists consider the south pole of the moon to be the most important part. While the countries of the world are trying to explore this region of the moon, India's space research organization ISRO was implementing the Chandrayaan project. Chandrayaan-3 landed on the South Pole of the Moon yesterday at a moment when the world is watching in space exploration. A scientist named Villupuram Veeramuthuvel from Tamil Nadu served as the director of this project. Veeramuthuvel from Villupuram was appointed as the director of Chandrayaan-3 project on 9th December 2019. veeramuthuvel was born in 1978, the son of retired railway employee Palanivel. He completed his early education at Villupuram Railway School. He then studied at Polytechnic...

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான மசோதாக்களை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

Image
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான மசோதாக்களை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். பிறகு அவர் பேசுகையில், 1860 முதல் 2023 வரை நாட்டின் கிரிமினல் நீதி அமைப்பு, ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டங்களின்படி இயங்கியது. இன்று நான் முன் வைக்கும் மூன்று மசோதாக்களில் குற்றவியல் நீதி அமைப்புக்கான கொள்கைச் சட்டமும் அடங்கும்.  ஒன்று 1860ல் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், இரண்டாவது 1898ல் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், மூன்றாவது 1872ல் உருவாக்கப்பட்ட இந்திய சாட்சியச் சட்டம். ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவோம். பழைய 3 சட்டங்கள் மாற்றப்படும். இதன் மூலம், கிரிமினல் நீதி அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய தண்டனைச் சட்டம்,1860க்கு மாற்றாக பாரதிய நியாய ஷன்ஹிதா 2023 கொண்டு வரப்படுகிறது. ...

சுதந்திர இந்தியாவில் ஆட்சி அமையுமானால் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்...'' என்று சொன்னார் மகாத்மா காந்தி.

Image
ஆட்சி என்றால் அது உமர் ஆட்சியாக இருக்கவேண்டும்  மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி.  வானிலே ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்.  இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார். நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார்.  அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார்.  அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது?’ எனக் கத்தினார். உமரோ அமைதியாக, “நண்பரே! நீர் நினைப்பதுபோல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர்போல் தோன்றுகிறது...

நியாயமான ஆட்சி

Image
நியாயமான ஆட்சி என்பது சத்தியத்தின் அடிப்படையில், சத்தியத்தை முன் வைத்து, அதையே தீர்வாக நினைத்து மக்களுக்கு மகத்தான சேவை செய்வதே. இவ்வாறு ஆட்சி அமைப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.  ‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் இறைவன் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். இறைவனின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. இறைவன் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:58) ‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் நீங்கள் நீதியை நிலை நாட்டுபவராகவும், இறைவனுக்காக சாட்சி கூறுபவராகவும் ஆகிவிடுங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்) இறைவன் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்.  எனவே, நியாயம் வழங்குவதில் மனஇச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும், நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சா...