முதலில் ஆளுநர் யார்? பணி என்ன தெரியுமா? சட்டசபை கூட்டம் செல்லுமா என ஏன் கவலை? வெளுத்த உச்சநீதிமன்றம்!
பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டத் தொடர் செல்லுமா? செல்லாது என்பது ஆளுநர் பன்வார்லால் புரோஹித்துக்கு தொடர்பே இல்லாத விவகாரம். பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டம் செல்லும். பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் மாநில தலைவராக பெயரளவுக்கு நியமிக்கப்படுவர் மட்டுமே என உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநில ஆளும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுத்த மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபை கூட்டத் தொடர் செல்லாது என கடிதம் அனுப்பி இருந்தார். பஞ்சாப் மாநில ஆளுநரின் இத்தகைய போக்குக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பஞ்சாப் மாநில அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா பெஞ்ச் கூறியதாவது: பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டம் செல்லுமா? செல்லாதா? என ஆளுநர் அக்கறைப்பட வேண்டியது இல்லை. பஞ்சாப் சட்டசபை கூட்டத் தொடர் செல்லும் தான். பஞ்சாப் மாநில அரசு சட்டசபை...