சேலம் மாவட்ட ஆட்சியர் திறந்தவெளி மைதானங்களில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை ஆய்வு செய்தார்

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அமைப்பட்டுள்ள தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்  ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சித் தலைவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளால் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் பட்டாசு கடைகளை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க சேலம் மாவட்டத்தில் திறந்தவெளி மைதானங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு கடைகள் நடத்திட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு கள் குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாநகர பகுதியில் மாநகர காவல் ஆணையர் அவர்களாலும், புறநகர் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலராலும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னதாக தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினரின் தடையில்லா சான்று பெறப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. சேலம் நகரில், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடல், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானம், ஸ்டீல் பிளான்ட் பகுதி என 3 இடங்களில் 145 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று புறநகர் பகுதிகளில் 20 இடங்களில் 288 தற்காலிக பட்டாசு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
திறந்த வெளி மைதானங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பட்டாசு கடைகளுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி உரிய இடைவெளியுடன்அமைக்கப் பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு வசதிகள்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

 முதலுதவிக்கென ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பொன்னி கூட்டுறவு பட்டாசு கடைகளும் இடம்பெற்றுள்ள.

பட்டாசு வாங்க வருபவர்களுக்கு உரிய வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

விபத்தில்லாத, மாசற்ற தீபாவளியை கொண்டாடவும், வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் பறவை விலங்கினங்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு அறிவித்த நேரத்தில் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாட கேட்டுக்கொள்வதுடன், இதற்கு ஒத்துழைத்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.கார்மேகம் அவர்கள் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu