பொது விநியோக திட்டப் பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்.
பொதுவிநியோகதிட்டப்பொருட்களை கடத்தபயன்படுத்தப்பட்டவாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து மாவட்டவருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளதாவது :
சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப் பட்டபோது அத்தியாவசியப் பண்டங் கள் சட்டம் 1955-இன்கீழ் 6(A ) வழக்கு களில் வாகனங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
இவ்வாகனங்களை மாவட்ட நிலை யிலேயே இறுதி செய்ய வழி காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் கைப்பற்றப் பட்ட 47 வாகனங்களுக்கு அபராதம் விதித்து இறுதிஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கைப்பற்றப்பட்ட வாகன உரிமையாளர்கள் வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகன -த்தை பெற்றுக்கொள்ள முன் வராத காரணத்தால் 47 வாகனங்கள் 10.11.2023 அன்று காலை 10.30மணிக்கு சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய் வுத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் சேலம் மேற்கு வட்டம், சர்க்கார் கொல்லப்பட்டி மருத்துவ கல்லூரி எதிரில் அமைந்துள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
வாகனங்களை பார்வையிட சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரை 97872 00363 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment