ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு

நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டி யில் வருகின்ற 27.02.2024 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை யொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி நடை பெறும் இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி, (25.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டி யில் வருகின்ற 27.02.2024 செவ்வாய் க்கிழமை அன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து வருவாய் துறை, பொதுப் பணித் துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான தடுப்பு வேலிகள்,...