2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
2024 - நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் (24.02.2024) இன்று நடைபெற்றது.
தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் -2024 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத் ல் நாடாளுமன்ற தேர்தல்- 2024 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வாக்காளர் பொறுப்புஅலுவலர்கள், உதவி வாக்காளர் பொறுப்பு அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட சேலம் மாவட்டத்திற்கான 16 தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி
தலைமையில் நடைபெற்றது.
தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொள்வதுடன், தங்களுக்கு கீழ் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இது குறித்த பயிற்சியினை வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் சேலம் மாவட்டத் ல் தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கை கள் குறித்தும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களுக் கான பணியினை உரிய முறையில்மேற்கொள்ள
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, அறிவுரைகள் வழங்கினார்கள். இக்கூட்டத் ல் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்)சிவசுப்ரமணியம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment