மக்கள் தலை விதி
ஒரு காலை நேர நடைப்பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்டர்கள் குழு, சாலை யோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்.
ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து- "அவருக்கு இடது முழங்காலில் கீல் வாதம் உள்ளது.."என்றார்.
இரண்டாவது மருத்துவர்- இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது ..என்றார்.
மூன்றாவது மருத்துவர்- அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .. என்றார்.
நான்காவது மருத்துவர்அந்த "மனி தனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார்நியூரான் கள் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது .." என்றார்.
ஐந்தாவது மருத்துவர்- "ஆனால் என க்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்த ரிக்கோல் நடைபிரச்சனை என்று தோன்றுகிறது," என்றார்.
அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறு ந்து விட்டது, அதை சரி செய்யக்கூடிய செருப்பு தைய்ப்பவர் யாராவதுஇங்கு அருகில் இருக்கிறாரா.?"என கேட்கிறார்.
தற்போது எல்லா டிவி, சோசியல்
மீடியாக்களில் வல்லுனர்கள் என, கொரானா வைரஸ் பற்றியும், மற்ற நாட்டு நடப்புகளை பற்றியும் வந்து பேசுபவர்கள், இந்த டாக்டர் குழு மாதிரி தான் பேசுகிறார்கள்.
அதையும் கேட்டு கொண்டு இருப்பது மக்களாகிய நமது விதி..
90 சதவீத செய்திகளையும் தொலைக் காட்சிவிவாதங்களையும்பார்க்காமல் தவிர்ப்பது.. நமக்கு, குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் மற்றும் நாட்டுக்கும் நல்லது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment