சேலம் ஆத்தூரில் இன்று மாலை லேசான காற்றுடன் கூடிய மழை மின்சாரம் நிறுத்தம்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் 28/05/20 20 இன்றுமாலை 5.30 மணியளவில் தொடங்கி லேசான காற்றுடன் மழை பெய்தது. இந்த லேசான மழையின் காரணமாக பகுதி முழுவதும் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் இந்த லேசான கோடை மழை யினால் மக்களுக்கோ விவசாயிகளு க்கோ எந்த விதபயனும் இல்லை.கன த்த மழை பெய்திருந்தால் விவசாயி கள் சந்தோஷமடைந்திருப்பார்கள் என்று மக்கள் கருதுகின்றனர்.
பத்து நிமிட மழை பெய்தால் பலமணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.இதனா ல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின் றனர். தொடர்பு கொண்டு கேட்டால் ஆத்தூர் பவர் ஹவுசில் பிரச்சனை என்று கூறி வருகிறார்கள்.
இந்த பத்து நிமிட மழையினாலேயே இந்த கதி என்றால் கனத்த மழை பெய்தால் எந்த நிலைமயில் இந்த மின்சார பராமரிப்பு இருக்கும் என் பதை நினைத்து மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
ஆகவே இந்த நிலை நீடிக்காமல் இருக்க மின்சார வாரியம் இயக்குதலும் பராமரித்தலும் பிரிவைச் சார்ந்த அதிகாரிகள் உடனடியாக அரசு கவனத்திற்கு எடுத்து சென்று சரி செய்தால் மட்டுமே மின்சார வாரியத்தின் மீதுள்ள மக்களின் அவநம்பிக்கையை தகர்க்கமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment