நபித்தோழியர் ஃகான்ஸா(ரலி) உமர்(ரலி) ஆட்சிக்காலம்... காதிஸிய்யா போர்க்களம்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
வ பரகாத்துஹு...
இஸ்லாமிய படையில் 30ஆயிரம் அல்லது 40ஆயிரம் படைவீரர்கள் மட்டுமே...

ஃகான்ஸா (ரலி) அவர்கள் ஜிஹாதிய முழு உணர்வுடன் தனது 4 மகன் களையும் அழைத்து வந்திருந்தார்.

அவர்" எனதருமைமைந்தர்களே !
இறைவழியில் போரிடுவதைத் தவிர மிகச்சிறந்த நற்கூலி வேறு எதுவுமில்லை,

அழியக்கூடிய உலக வாழ்க்கையை விட மறுமையின் நிரந்தரவாழ்க்கை சாலச்சிறந்தது.

அல்லாஹ் கூறுகின்றான்
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

முஃமின்களே! பொறுமையுடன்இருங் கள்; (இன்னல்களை) சகித்துக்கொள் ளுங்கள்;(ஒருவரை ஒருவர்) பலப்படு த்திக் கொள்ளுங்கள்; 

அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங் கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
(அல்குர்ஆன் : 3:200)
நாளை இறைவனின் நாட்டப்படி நலத் துடன் கண்விழித்தால் பெற்றபயிற்சி களைப்  பயன்படுத்தி இறைவனின் உதவியுடன்  எதிரிகளை  முறியடியு ங்கள்.போர் உச்சக்கட்டத்தை எட்டும் போது எங்கும் தீப்பொறிகள் பறக்கும் காட்சி யை நீங்கள் கண்ணுற்றால் மையமாக இருக்கும் பகுதியில் புகுந்து போராடவேண்டும்.

வெற்றிஅடைந்தீர்களானால் இது சிற ப்பானதாகும், வீரமரணம் (ஷஹாதத்) அடைந்தால் அது இதைவிட மிகச் சிற ப்பானதாகும் மறுமையின் ஈடேற்ற த்தை அடைவீர்கள்,

நான்கு மகன்களும்...எங்களின் அருமை அன்னையே !

இன்ஷா அல்லாஹ் நீங்கள் எங்களை உங்களின் எதிர்பார்ப்புக்கு ஒப்பாக  காண்பீர்கள். எங்களை நிலை குலை யாத உறுதியுடன் காணத்தான் போகிறீர்கள்.

இறைவா என்னிடமிருந்த பிரியமான சொத்துக்களை அனைத்தும் உனது வழியில் அளித்துவிட்டேன், எனது இந்தச் சிறிய அர்பணிப்பை ஏற்றுக் கொள்வாயாக என்ற அன்னையின் பிரார்த்தனையைக் கேட்டுஷஹாதத்  வேட்கையுடன் வைகறையில் நான்கு இளவல்களும் குதிரையில் போர்ப் பரணி பாடி ஒன்றாக களத்தில் கால் பதித்தனர்.

எதிரியின்  படைகளை  சிதறடித்து மையப்பகுதியில் வந்த அவர்களை பல நூறு படைவீரர்கள் சூழ்ந்த போதும் திகிலடையாது ஏராளமான எதிரிகளை கொன்று குவித்து பலரை காயப்படுத்தி இறுதியில் தம் இன்னு -யிரை நீத்து ஷஹாதத் எனும் பெரும் பேற்றை பெற்றனர்.

வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தள் ளாடும் அந்த வீரத்தாயின் செவியில் இச்செய்தி வந்து சேரும் போது ஃகான்ஸாஃ (ரலி) அழுது ஒப்பாரி வைக்காமல்......

அல்லாஹ்விற்கு ஸுஜுது செய்து 
"எனது மைந்தர்களுக்கு ஷஹாதத் என்ற பெரும் பேற்றினை அளித்த அல்லாஹ்வுக்கே புகழும், நன்றியும் தவிர மறுமை நாளில் வல்ல நாயன் எனது மகன்களுக்கு வழங்கும் கரு ணையின் நிழலில் எனக்கும் இடம் தருவான் என்று நான் நம்புகிறேன்". 
என்று சத்தியத்திற்கு சான்று பகர்ந்தார்.

அர்ரஹ்மான் இது போன்ற அன்னை யரையும் மகன்களையும் நமது சந்த -தியிலும் நம்மிலும் தோன்றச்செய்து சத்தியத்திற்கு  சான்று  பகறு  பவர்க ளாகவும்  ஷஹாதத்தை  அடையும் பெரும் பேறு பெற்றவர்களாகவும் நம் அனைவரையும்ஆக்கிஅருள்வானாக.

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏