கயத்தாறு முத்துக்கிருஷ்ணேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் புதுப்பி க்க ரூ.97.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருள்மிகு முத்துக்கிருஷ்ணேஸ்வரர் (திருநீலகண்ட ஈஸ்வரர்)  கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் பழுது பார்த்து புதுப்பிக்க ரூ.97.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:    

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந் தூர் அருள்மிகுசுப்பிரமணி ய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டிதிருவிழாவி ற்கு வருகை தரும்  பக்தர்கள்  சுவாமி தரிசனம்  செய்வதற்கு  ஏதுவாக தமி ழக அரசின்  உத்தரவுபடி மாவட்ட நிர் வாகம் ஒவ்வொருஆண்டும்பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கயத்தாறு   ஊரை தலை  நகரமாகக் கொண்டு அரசாண்டமுத்துகிருஷ்ண பாண்டியன்  என்ற சிற்றரசன்  தனது அரசாட்சி காலத்தில் இவ்வூரின் நடுப் பகுதியில்  5  நிலைகளைக் கொண்ட ராஜ   கோபுரத்துடன்  கூடிய கிழக்கு நோக்கிய  திருக்கோயிலை  அமைத் தான். இந்த ராஜகோபுரத்தை அமை க்க அரசன் சீவலப்பேரியில் இருந்து தலைச்  சுமையாக கற்களை குடிமக் கள் மூலம் கொண்டு வரச்செய்தான் என்றும் வரலாற்றுச் சிறப்பில்கூறப்ப டுகிறது.  இக்கோயிலில் கற்களால் ஆன மதில்சுவர் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலில் இரு இடங்களில் நாழி க்கிணறு, இரண்டு பள்ளியறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோயிலில் அனைத்து தெய்வங்களும் இடம்பெற் றுள்ளன.காலை,மாலை நேரங்களில்  சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 

இக்கோயிலில்சிவராத்திரிகந்தசஷ்டி சூரசம்ஹாரம்,திருவாதரன தேரோட் டம், பங்குனி உத்திரத் திருவிழா உள் ளிட்ட   அனைத்து  வகை   நிகழ்ச்சிக ளும் நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் பல்வேறு பகுதிகளில் சிதிலமடைந்துள்ளதாகவும்,  குறிப் பாக 5நிலைகள் கொண்ட ராஜ கோபு ரம் மற்றும்அதில்உள்ளசிற்பங்களும்   பழுதடைந்துள்ளது.   எனவே  இதை
பழுது பார்க்க வேண்டும் என கயத் தாறு பகுதி பொதுமக்கள், பக்தர்கள், அர்ச்சகர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கை முதல்வரின்கவன த்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனைப் பரிசீலித்த முதல்வர் இந்து சமய அறநிலையத் துறை மூலம் திரு க் கோயிலில் 5  நிலை ராஜகோபு ரம் பழுதுபார்த்து புதுப்பிக்க ரூ.97.5 லட் சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 

மேலும், தொன்மை மாறாமல் புதுப்பி க்கும்  பணிமேற் கொள்ளவும் உத்தர விட்டார்.  இப்பகுதி மக்களின் கோரிக் கையை ஏற்று கயத்தாறு அருள் மிகு முத்துக்கிருஷ்ணேஸ்வரர் திருக்கோ யில் ஐந்து  நிலை ராஜகோபுரம்பழுது பார்த்து  புதுப்பிக்க   நிதி    ஒதுக்கீடு செய்து பணிகளை உடனடியாகதொட ங்க உத்தரவிட்டமுதல்வர்,இந்து  சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகி யோருக்கு  தூத்துக்குடி மாவட்ட மக் கள், பக்தர்கள், அர்ச்சகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என செய்திக் குறிப்பில் கூறப் பட்டு ள்ளது.

தமிழ் மாநில செய்திகளுக்காக  கோவில்பட்டி நிருபர் முத்துக்குமார்.

Comments

Popular posts from this blog

The World Water War 1999- 2001 took place in the city of Cochabamba, Bolivia.

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu