கொரோனா தீவிரம் எதிரொலி
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை மீண்டும் முழு லாக்டவுன்.
மதுரை: கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் மதுரையில் நாளை முதல் ஜூன் 30-ந் தேதி வரைமீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவ தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில்கொரோ னா அதி உச்சமாக பரவுவதால் 12நாட் கள் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட் டிருக்கிறது. இதனால் இம்மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் களுக்கு திரும்பினர்.
இதனையடுத்து பிற மாவட்டங்களி லும் கொரோனா பரவல் அதிகரித் தது. குறிப்பாக மதுரை, வேலூர், திரு வண்ணாமலையில் கொரோனாபாதி த்தோர் எண்ணிக்கை கிடு கிடுவென அதிகரித்தது.
மதுரையில் முழு லாக்டவுன் இந்நி லை யில் மதுரையில் நாளை முதல் ஜூன் 30-ந் தேதி வரை முழு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி, பரவை பஞ்சா யத்து, மதுரை கிழக்கு ,மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் நாளை முதல் லாக்டவுன் அமல்படுத் bதப்படுகிறது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் இந்த லாக்டவுன் அமலுக்கு வருகிறது.
ஜூன் 28-ல் தீவிர. லாக்டவுன் இத னைத் தொடர்ந்து மதுரையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள் ளன மதுரையில் வரும் 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று எந்த ஒரு கடைகள் எதுவும் திறக்காமல் முழு அளவிலான தீவிரமான லாக்டவுன் கடைபிடிக்கப்பட இருக்கிறது. அன்று பொதுமக்கள் வெளியில் நடமாடவும் கூடாது.
ஜூன் 29,30-ல் வங்கிகள் மூடல் மேலும் மதுரையில் ஜூன் 29,30 தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படாது. அதேபோல் மதுரை யில் டீ கடைகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் என அனைத்து போக்குவரத்தும் முடக்கப்படும். கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும்.
ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரங்க ளில் மட்டும் பார்சலுக்கு மட்டுமேஅனு மதிக்கப்படும். மளிகை கடைகள்,காய் கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை காலை 6மணிமுதல் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும். வீடுகளில் இருந்து 1 கி.மீ சுற்றளவில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும்.
33% பணியாளர்களுடன் அலுவலக ங்கள்ரேசன் கடைகளும் காலை 8 மணி முதல் பகல் 2 மணிவரை மட்டுமே இயங்க வேண்டும்.
அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 33% பணியாளர்க ளுடன் மட்டுமே இயங்க அனுமதிக்க ப்படும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment