துஆவைப் பற்றிய விளக்கமளித்த கண்மணி நாயகம் ரசூல்லே கறீம்
என்று படு சுருக்கமான துஆ ஒன்றைச் சொல்கிறார்கள் நபி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள்.
இந்த துஆவைப் பற்றி சிந்தித்த அப்பாஸ் (ரலி) சில நாள் கழித்து நபியவர்களிடம் வந்து, “யா ரசூலுல்லாஹ். இந்த துஆ ரொம்பவும் சிறியதாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் பெரிதாகச் சொல்லிக் கொடுங்களேன்” என்றார்
அதற்கு நபியவர்கள், “என் தந்தையின் சகோதரரே! அல்லாஹ்விடம் ஆஃபியா (العافية) வேண்டுங்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாக! ஆஃபியாவை விடச் சிறந்தததை நீங்கள் பெற முடியாது” என்றார்கள்.
ஆஃபியா என்றால் என்ன என்பது கீழ்காணுமாறுவிவரிக்கப்பட்டுள்ளது
நோய், துயர், துன்பம்போன்றவற்றிலி ருந்து என்னைக் காப்பாற்று என்பது ஆஃபியா.
ஆரோக்கியமாக இருந்தால் அது ஆஃபியா
போதுமான பொருளாதாரம் வாய்த்திருந்தால் அது ஆஃபியா
பிள்ளைகளின் பாதுகாவல் - அது ஆஃபியா
மன்னிக்கப்பட்டும் தண்டிக்கப்படா மலும் இருந்தால் அது ஆஃபியா
“யா அல்லாஹ்! என்னை இடுக்கண், துயரம், துக்கம், கொடுமை, தீங்கு, கேடு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாயாக. என்னை சோதனைக்கு உள்ளாக்காதே”
என்று கேட்பவை அனைத்தும் எளிய, சிறிய, ஆனால் செறிவு மிக்க இந்த துஆவில் அடக்கம்.
எனவே உள்ளார்ந்து இறைவனிடம் வேண்டுங்கள்
அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க அல்-ஆஃபியா.
Comments
Post a Comment