கேரளாவில் யானை கொல்லப் பட்டதை மத மோதலாக்கும் பாஜக தலைவர்கள்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
கேரள மாநில வனப்பகுதியில் பழத் தில் வெடி வைத்து ஒரு கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலை யில் யானை மரணத்தை வைத்து மதமோதல்களை உருவாக்கும்நோக் கத்தோடு பாஜக தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதுகண்டனத்திற்குரியது.
யானையின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளபாஜகதலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்தியஅமைச்ச ருமானமேனகாகாந்திமலப்புரம் மாவ ட்டம் இந்தியாவிலேயே அதிக வன் முறைகள் நடக்கும் மாவட்டம் என்றும், மூன்று நாட்களுக்கு ஒரு யானை அப் பகுதி மக்களால் கொல்லப்படுகிறது என்றும்,மலப்புரம் சாலைகளில்விஷ த்தை வைத்து 300 முதல் 400 பறவை கள் மற்றும் நாய்கள் ஒரே நேரத்தில் கொல்லப்படுகிறது.என தனது விஷ மக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.கேரளா மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமானோர் வாழும் மாவட்டமான மலப்புரம் மாவட்டத்தை தொடர்பு படு த்தி தெரிவித்துள்ள மேனகா காந்தி யின் இதுபோன்ற மதவெறுப்புணர்வு கருத்து வன்மையாகக் கண்டனத்திற் குரியது. இறந்த யானை காயத்துடன் ஆற்றிலிருந்த இடம் மலப்புரம்மற்றும் பாலக்காடு எல்லை. யானை இருந்த இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த மாவட்ட மக்களை ஈவிரக்கமற்ற மனிதர்களாகச் சித்தரித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.யானை மரணம் குறித்து அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு ள்ள நிலையில் எந்த ஆதாரமுமின்றி மலப்புரம் முஸ்லிம் மக்களைக் குற்ற வாளிகளாகச் சித்தரித்து அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட் டுவரும் மேனகா காந்தி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலப்புரம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் M.H.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment