தமிழக அரசைக் கண்டித்து ஜுலை 14-ல் தமிழகமெங்கும் முற்றுகை போராட்டம்

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக வெளி நாட்டு முஸ்லிம்களைச் சிறையில் அடைத்து வதைச் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டம்.
தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள்  உள்ளிட்ட 129  முஸ்லிம் களை  தமிழக அரசு கைது  செய்தது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட  இவர்கள் சென் னைக்கு   கொண்டு  வரப்பட்டு புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார் கள். பிறகு இவர்களுக்குப் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்ட தருண த்தில் இவர்கள் சைதாபேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை  நீதிமன்றங்களில் .பிணை வழங்கப்பட்ட நிலையில் இவர்களில் 98 நபர்கள் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
தமிழக அரசு இந்த சிறார் சிறையை விசா விதிமுறை மீறல் செய்தவர் களை அடைப்பதற்கான சிறப்பு முகாம் என்று அறிவித்தது.

சென்னை   உயர் நீதி மன்றத்தின் மதுரை அமர்வு  நீதிமன்றம் கடந்த ஜூன் 12 அன்று 31 வெளிநாட்டவர்க ளுக்குப்  பிணை வழங்கியதுடன் இவர்கள் விசா விதிமுறை மீறலுக் காக போதுமான அளவு தண்டனை அனுபவித்து விட்டார்கள்  என்றும் இவர்கள் கொரோனாவை பரப்பவி ல்லை என்றும் அவர்களது வழக்கை முடித்து அவர்கள் தம் சொந்த நாடுக ளுக்குத் திரும்பத் தமிழக அரசு ஒத்து ழைக்க வேண்டும் என்று உத்தரவிட் டது  ஆனால் , இவ்வாறு   விடுதலை செய் யப்பட்டவர்களும் புழல் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் தமிழகத்தில்  மட்டுமே வெளிநாட்டுமுஸ்லிம்கள்இந்த கொடு மையை   அனுபவித்து   வருகின்றார் கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு  முஸ்லிம்களை  விடுவி க்க வலியுறுத்தி   தமிழ்நாடு  அனை த்து முஸ்லிம்  இயக்கங்கள்  மற்றும் அரசியல்  கட்சிகள்   கூட்டமைப்பின் சார்பிலும்   பல்வேறு  முக்கிய  அரசி யல் கட்சிகள் சார்பில் புழல்சிறையில் உள்ள வெளிநாட்டு முஸ்லிம்கள் அங் கிருந்து ஆரோக்கியமான இடத்திற்கு மாற்ற  வேண்டு மென்றும்  உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையின் தீர்ப் பின் அடிப்படையில்  அவர்கள் மீதான வழக்குகள் உடனடியாகமுடிக்கப்பட்டு அவர்கள் தமது நாடுகளுக்குத்திரும்ப வழிவகுக்க வேண்டுமென்று விடுத்த வேண்டுகோளுக்கும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.
கொரோனா பரவும் புழல் சிறையில் வெளிநாட்டு முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்  நிலையில் 30 நபர்கள் -தங்கும் வசதி கொண்ட இட த்தில் தனி நபர் இடைவெளியைகடை ப்பிடிக்க வழி வகுக்காமல் 129 பேரை அடைத்து வைத்திருக்கும் நிலையில் தமிழகஅரசின் மனிதநேயமற்ற செய லை கண்டித்தும், இவர்கள்  அனைவ ரது வழக்கையும் உடனடியாக முடித்து அவர்களைத் தாயகம் அனுப்ப விரை ந்து   நடவடிக்கை  எடுக்க  கோரியும் தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநக ரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பும். இதர ஊர்களில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் முன்பும் வரும் செவ்வாய்க்கிழமை ஜூலை 14 காலை 11 மணிக்கு முற்றுகை  போரா ட்டம் நடைபெறும். 
மேலும் சமூகஇடைவெளியை கடைப் பிடித்தும் முக கவசம் அணிந்தும்   உலகளாவிய அளவில் தமிழர்களின் விருந்தோம்பல் மாண்பிற்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து நடை பெறும் போராட்டத்தில் அநீதிக்கு எதிராக அனைவரும் பங்கு கொள்ள  வேண்டும் என்று த.மு.மு.க மற்றும் ம.ம.க தலைவர் M.H. ஜவாஹிருல்லா தனது அறிக்கையில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

The World Water War 1999- 2001 took place in the city of Cochabamba, Bolivia.

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu