பண்டைய காலத்தில் திருகை இன்றைய காலத்தில் மிக்சி

பழங்காலத்தில்பாட்டி பயிறு, உழுந்து உடைக்க பயன்படுத்தியது தான் திருகை.

பயிறு,  உழுந்து   போன்ற   தானியங் களை உடைத்துப் பருப்பாக்குவதற்கு பயன்பட்ட வட்டவடிவில் அமைந்த
மேலும் கீழும் இரு பாகங்களைக் கொண்ட கருங்கல்லினாலான சாதனம் தான் திருகைக்கல்.
வட்டவடிவ கற்களின் மேற்பகுதியில்
தானியங்களை சிறிது சிறிதாக உள் நுழைப்பதற்கு  ஏற்ற வகையில் நடு வில் சற்று அகண்ட ஒரு  துளை இரு க்கும். அப் பகுதியிலேயே அரைக்கக் கூடியபயறு உள்ளிட்டதானியங்களை இடுவார்கள்.
கீழ்ப்பகுதி கல்லின் மையத்தில் ஒரு துளை  அமைந்திருந்கும். கல்லின் நடுவில் அமைந்திருக்கும் துளையா னது இரும்புத்தண்டு ஒன்றின் மூலம் திருகையின் இரண்டு வட்டவடிவ கல் பாகங்களையும் ஒன்றாக பொருத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டி ருக்கும். திருகையின் மேற்பகுதியை இலகுவாகக்   சுழற்றுவதற்கு   ஏற்ற வகையில்  இரும்புத்துண்டால் அல் லது மரக்கட்டையால் ஆன தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

திருகையின் மேற் பகுதியை ஓரிரு தடவைகள்  சுழற்றினால் தானியங் களை பருப்பாக  மாற்றலாம் மாவா க்கவிரும்பின் பலதடவைகள் சுழற்ற வேண்டும். 
மேல் நடுப். பகுதியில்  உள்ள துனை யின் ஊடாக இடப்படும் தானியங்கள் சுழற்றும் போது அரைபட்டு இரு பாக ங்களுக்கும் இடைப்பட்ட விளிம்பின் ஊடாக வெளியேறும்.

இதை சேகரிப்பதற்காக திருகையின் கீழ் விரிப்பான்  வைக்கப்படும். அரை பட்ட தானியங்கள் விரிக்கப்பட்ட விரி ப்பானில்சேகரிக்கப்படும்.அரைக்கப்படும் தன்மையை நன்றாக பேணுவத ற்காக திரிகையில் பயன்படும் வட்ட வடிவ கருங்கல்லில் இரும்பு உலோக உளியால் சிறு சிறு பொழிவுகள் செய்து கொள்வார்கள்.

பழங்காலத்தில் பெரும்பாலும் ஒவ் வொரு வீட்டிலும் திருகல் அவசியம் இருக்கும்.  நவநாகரீக    காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக்ஸி  வந்த காரணத்தினால் திருவைகல் பயன்பாடு இல்லாமல் போய் விட்டது 
இன்றைய தலைமுறையினர் திருகை கல் குறித்த தகவல்பெரும்பாலானோ ர்க்கு தெரிவதுஅரிதாகிப் போய் விட் டது.திருச்சியில் முன்னோர்கள் பயன் படுத்திய பழங்கால பொருட்கள் சேக ரிப்பாளர்களானயோகாசிரியர்விஜய குமார், வழக்கறிஞர்  சித்ரா  விஜய குமார் குடும்பத்தினர் தனது வீட்டின் நுழை வாயிலிலேயே பத்திற்கும்மேற் பட்ட பல்வேறு வடிவங்கள்உயரங்கள்  எடைகள்  கொண்ட  திருகையினை வைத்து இன்றைய தலைமுறையின ருக்கு பழங்காலத்தில் பாட்டிபயன்படு த்திய திருகையின் பயன்பாடு குறி த்து எடுத்துரைத்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏