தமுமுக மமக சார்பாக நடக்கவிருந்த மாநகராட்சிஅலுவலத்தில் குடியேறும் போராட்டத்தில் சமரசம்
கடந்த பல ஆண்டுகளாக சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் கிளையில் உள்ள கே கே நகர் மற்றும் ஜிந்தகிபுரம் ஆகிய பகுதியில் வாழும் மக்கள் சாக்கடை வசதிசரியில்லாமல் சாலையெங்கும் சாக்கடை நீர் வழிந் தோடும் நிலையில் வசித்து வந்துள்ளனர்.
பல முறை மாநகராட்சி மேற்கு
மண்டல அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நேற்றைய தினம் 14.07.2020 சாக்கடை வசதி சரியின்றி நோயுற்று சாவதை விட மண்டல. மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போரா ட்டம் அறிவித்தவுடன் சூரமங்கலம் காவல் கண்கானிப்பாளர் மரியாதை க்குறிய செந்தில் அவர்கள் மாநகரா ட்சி நிர்வாகத்தை உடனே அழைத்து மக்களின் நலன் காக்கும் பணியை உடனே துவங்குமாறு கேட்டுக் கொண்டார்.
உடனே மேற்கு மண்டல மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வராஜ் அவர்கள் உடனே பணிகளை துவங்கு வதாகவும் போராட்டத்தை கைவிடுமா றும் கேட்டுக் கொண்டார் அதிகாரிக ளின் உறுதி மொழியை ஏற்றுக் கொண்ட தமுமுக, மமக நிர்வாகம் மண்டல அலுவலகத்தில் போராட்டத் திற்கு குவிந்த மக்களின் கோபத்தை கட்டுப்படுத்தி பணியை தொடராத பட்சத்தில் மீண்டும் ஒரு போராட்டம் அறிவிப்போம் என்று சொல்லி மக் களை களைந்து செல்ல வைத்தனர்.
சொன்னது போலவே மண்டல மாநக ராட்சி நிர்வாகம் தனது பணியை துவங்கியது மிகவும் பாராட்டுதலுக் குறியது அமைதி பேச்சு வார்த்தை யின் போது மாவட்ட தலைவர்S.ஷேக் முஹம்மது,மாவட்ட செயலாளர் பக்ஷீ மாவட்ட துணை செயலாளர் அஸ்ரார் கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சையத் சலாவுதீன், பகுதி தலைவர் அ.அலாவுதீன் பாஷா, மமக பகுதி செயலாளர் சிக்கந்தர் பாஷாதொழிற் சங்க பொருளாளர் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனையை எடுத்து கூறினர்.கால தாமதமாக பணியை துவங்கியது தவறு என்றும் உடனே அனைத்து பணிகளையும் முடித்து தருவதாக வும்,ஜிந்தகி புரம் சாக்கடையை சுற்றி தடுப்பு சுவர் ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதியளித்தனர்.
இந்த போராட்டத்திற்கு பெரும் பஙகு வகித்த கொண்டலாம் பட்டி பகுதி தலைவர் ஜீலான்,சூரமங்கலம் பகுதி செயலாளர் கயர் அலாவுதீன் பொரு ளாளர் மௌலவி A.அப்துல் ரஹீம் அன்வாரி, மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர்கள் சையத் உசேன் வாட்டர் முஹம்மது ரபீக் ஆகி யோர் மற்றும்மௌலவி மகசூம் ஹஜ்ரத் பணி மிகவும் பாராட்டுதலுக் குறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment