"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்"ஏன் சட்டவிரோதமானது.
ஏன் சட்டவிரோதமானது.
காவல்துறையினருடன் எப்பொழு தும் கங்காரு குட்டி போல் தொற்றி க்கொண்டு திரியும் 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' ஒரு சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு அல்ல, சாதாரண தன்னா ர்வ தொண்டு அமைப்பு.
இவர்களின் அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு. இவர்களின் பணி காவல்துறையினருக்கும், மக்களுக் குமிடையே நல்லுறவை ஏற்படுத்து வது சமூக விழிப்புணர்வு தருவது.
இவர்கள் காவல்துறையினர் அணி யும் சீருடையோ சீருடை போன்றோ அணியக் கூடாது, கைகளில் லத்தி பிடிக்க கூடாது, காவல் நிலையத்தில் நடக்கும் விசாரணையில் கலக்க கூடாது, காவல்துறையினர் பராமரிக் கும் ஏடுகளைப் பார்வையிடக் கூடாது சமூகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் காவல்துறை சார்பாக பங்கெடுக்கக் கூடாது.
காவல்துறை வாகனங்களிலோ, ரோந்து செல்லும் காவல்துறையின ரின் இருசக்கர வாகனங்களில் பின் அமர்ந்தோ சட்டப் பணிகளை செய்ய க்கூடாது.
ஆனால் நடைமுறையில் இவைகள் எல்லாமே தலைகீழாக நடக்கின்றன. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்அமைப்பினர் ஒரு காவலர் செய்யும். அத்தனை வேலைகளையும் செய்கிறார்கள் லத்திஎடுக்கிறார்கள், அடிக்கிறார்கள், விசாரணையில் கலந்து கொள்கிறார் கள், காவல் நிலையத்திற்குள் சர்வ சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள்! இந்த அதிகாரங்களை இவர்களுக்கு வழங்கியது யார்?
காவல்துறையில் வேண்டிய மட்டும் காவலர்கள் இருக்கையில் எதற்காக இப்படி ஒரு அமைப்பு? சட்டம் படிக்கா தவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பராமரி க்கும் இடத்தில் என்ன வேலை?
எங்களுக்கு பணி சுமை இருக்கிறது அதை குறைப்பதற்கு இத்தகைய அமைப்பு தேவை என்பது காவல் துறையினர் தரப்பு விளக்கமாக இருக்கிறது.
இருக்கட்டும், நாம் அதை கெடுக்க வேண்டாம். மாறாக......
பிரண்ட்ஸ் ஆப் MP/ MLA,
பிரண்ட்ஸ் ஆப் அட்வகேட்ஸ்,
பிரண்ட்ஸ் ஆப் டாக்டர்ஸ்,
பிரண்ட்ஸ் ஆப் இன்ஜினியர்ஸ்,
பிரண்ட்ஸ் ஆப் டீச்சர்ஸ் என பல புதிய அமைப்புகளை இனி உருவாக்க வேண்டும்!
அந்த அமைப்பினர் சம்பந்தப்பட்ட நபர்களுடன் சேர்ந்து களப்பணியாற் றுவார்கள்!
உதாரணமாக, பிரண்ட்ஸ் ஆப் அட்வ கேட்ஸ் அமைப்பில் இருப்பவர்கள் குமாஸ்தாவிற்குப் பதிலாக அட்வ கேட்ஸ்களுடன் சர்வசாதாரணமாக நீதிமன்றத்திற்குள் சென்று அட்வகே ட்ஸ்களுடனேயே நின்று பணியாற் றுவார்கள் - முறுக்கிய மீசையுடன். தடி தடியாய் பத்து பிரண்ட்ஸ் ஆப் அட்வகேட்ஸ் நபர்களை வைத்துக் கொண்டு கூண்டில் இருக்கும் ஒரு சாட்சியை குறுக்கு விசாரணை செய்தால் சாட்சி எப்படி பதில் சொல்வார் என்பதை கற்பனை பண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்!
அதெல்லாம் முடியாது இதெல்லாம் சட்ட விரோதமானது என்றால்...
காவல்துறையினருடன் இணைந்து செயல்படும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பும் சட்ட விரோதமானதுதான். அதை தடை செய்யுங்கள்!
ஏனெனில், ஒரு கண்ணில்
சுண்ணாம்பும் மறு கண்ணில்
வெண்ணையும் வைக்கக் கூடாது!
Comments
Post a Comment