சேலம் சூரமங்கலம் தர்மநகர் மெயின் ரோடு பகுதி பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கும் முகாம்


சேலம் சூரமங்கலம் பகுதி இலக்கிய அணி சார்பாக பகுதி செயலாளர் V.S.அப்பாஸ் அவர்கள் தலைமையில் தர்மநகர் மெயின் ரோடு பகுதி பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.
மாவட்ட மருத்துவரணி பொருளாளர் அப்துல். ஜப்பார்  துவக்கி  வைக்க மாவட்ட தொழிற்சங்க அணி பொரு ளாளர் ஆட்டோ அப்துல்லாஹ்,பகுதி தலைவர் அ.அலாவுதீன் பாஷா          செய லாளர் கயர் அ.அலாவுதீன்,           மமக செயலாளர் அ.சிக்கந்தர் பாஷா, பகுதி துணை தலைவர் கீரனூர் இப்ராஹிம்,மமக துணை செயலாளர் ஜங்சன்அ.அப்துல்லாஹ், விவசாய அணி செயலாளர் அபூபக்கர்  ஆகியோர் முன்னின்று பொது மக்கள் மூன்னூறுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
அமைப்பின் சேவையை பொது மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.ஆஜாத் நகர் கிளை தலைவர் மௌலவி அஸ்ரப் அலி யூசுபி அவர்களது துவாவுடன் இனிதேநிறைவுற்றது என்பது குறிப்பிடதக்கது.

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏