கோவை: ராமர் கோயில் நிதி திரட்ட வந்த இப்ராஹிம் கைது
வேலூர் இப்ராஹிம் பாஜக ஆதரவா -ளர் என்பது குறிப்பிடத்தக்கது
அச்சுறுத்தல் இருப்பதால் கைது செய்ததாக தகவல்
பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாள ரான வேலூர் இப்ராஹிம் அயோத்தி யில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி திரட்டி வருகிறார். இதற்காக கோவை வந்த அவரை போலீசார் அவர் தங்கியிருந்த விடுதியில் வைத்து இன்று கைது செய்துள்ளனர்.
மேலும் இப்ராஹிம் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் அவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் இப்ராஹிம் கூறியதாவது : "சில பிரிவினைவாத சக்திகளால் எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் என்னை கைது செய்கின்றனர். அவர்களை ஒடுக்குவதற்கு பதிலாக என்னை கைது செய்கின்றனர். கைதாகி சென்றாலும், மீண்டும் வந்து ராமர் கோவில் அமைக்க நிதி திரட்டுவேன் இவ்வாறு தெரிவித்தார்.
Comments
Post a Comment