கல்யாணராமன் கைது

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் தமிழக பாஜக நிர்வாகி ஆவார். கல்யாணராமன் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பகிரங்க மாக பேசக் கூடியவர். மேலும் பல இட -ங்களில் திராவிட இயக்க சித்தாந்த -த்தை விமர்சித்துள்ளார்.

 இந்நிலையில் சமூக வலைதளங்க -ளில் தொடர்ந்து இஸ்லாமிய மதத் திற்கு எதிரான கருத்துக்களை பதி விட்டு வந்ததாக கூறி தமிழகத்தின் பல இடங்களில் தமுமுக மமகவினர் சாலையறியல் மற்றும் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தி வந்ததும் புகாரும் அளித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல்  இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில செயலாளர் சாஹிர்கான் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில்    ”பாஜகவை  சேர்ந்த கல்யாணராமன் தனது முகநூல் பக்க -த்தில்   தொடர்ந்து  இஸ்லாமியர்கள் உயிரினும்   மேலாக   மதிக்க   கூடிய நபிகள்   நாயகம் பற்றி   தரக்குறை வான வார்த்தைகள் கொண்டு பதி விட்டு வருகிறார். இவருடைய பதிவு கள் அனைத்தும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியே வருகிறது. 

இவரின் நோக்கம் இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் மூலம் முஸ்லீம் இளைஞர்களை வன்முறை பாதைக்கு மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.
ஆகையால் கல்யாணராமனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்”என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல புகார் கள் சென்னை காவல்துறை ஆணை யாளர் அலுவலகத்தில் கல்யாண ராமன் மீது வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைதொடர்ந்து  இன்று காலை அகமதாபாத்லிருந்து சென்னை திரும்பிய கல்யாணராமனை சென்னை விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

Eid al-Adha 2021

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு