வீடு புகுந்து குரங்குகள் தூக்கிச் சென்ற 2 பச்சிளங் குழந்தைகள்: 8 நாள் பெண் சிசு சடலமாக மீட்பு.

தஞ்சையில் குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட, பிறந்து   8   நாட்களே ஆன  இரட்டைப்பெண்குழந்தைகளில் ஒரு குழந்தை ஓட்டின் மேல் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை அகழியில் இருந்த சடலமாக மீட்கப்பட்டது.

குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுதது  காண்போரை கலங்கச் செய்தது.

தஞ்சை மேல அலங்கத்தில், ராஜராஜ சோழன்     காலத்தில்     வெட்டப்பட்ட அகழியை ஒட்டிய பகுதிகளில் நெருக் க மாக வீடுகள் அமைந்துள்ளன.இந்த பகுதியில் குரங்குகள் தொல்லை பெருகி வருவதாகவும், வீடுகளில் உள்ள பொருட்களை தூக்கிச் சென்று விடுவதாகவும் ஏற்கெனவே புகார்கள் உள்ளன.

இந்நிலையில், ராஜா-   புவனேஸ்வரி தம்பதி 8 நாட்களுக்கு முன்னர் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளுடன் வீட்டில்    இருந்துள்ளனர்.   திடீரென வீட்டிற்குள் புகுந்த இரண்டு குரங்கு -கள்     பெற்றோர்   சுதாரிப்பதற்குள் வீட்டில்     தூங்கிக்     கொண்டிருந்த
 2 பச்சிளங் குழந்தைகளையும் தூக்கி சென்றுள்ளன.

பதறிப்போய் பெற்றோர் குரங்கை பின்  தொடர்ந்த    நிலையில், ஒரு குரங்கு வீட்டின் ஓட்டுக்கூரை மீது ஒரு குழந்தையைபோட்டுவிட்டுஓடிவிட்டது மற்றொரு குரங்கு குழந்தையுடன் ஓடிவிட்ட நிலையில், அது சென்ற பகுதியில் தேடியுள்ளனர். 

இதில், மற்றொரு பெண் குழந்தை அருகே இருந்த அகழியில் சடலமாக மீட்கப்பட்டது.நடந்த சம்பவம் குறித்து, குழந்தைகளின் தாயார்கண்ணீருடன் விவரித்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தது.


Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு