பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பிப் 26ல் லாரிகள் ஸ்டிரைக் மார்ச் 15 முதல்கால வரையற்ற வேலை நிறுத்தம்

தமிழகம்: சேலம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை  கண்டித்து தமிழகம் உள்பட 6 மாநில -ங்களில் வரும் 26ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடக்கிறது. 

இதையடுத்து மார்ச் 15 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடு -பட போவதாக,   தென்  மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்ட -மைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். 

தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் கூட்டம் சேலத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


பின்னர் தென்   மாநில லாரி உரிமை -யாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா அளித்தபேட்டி:பெட்ரோல்,டீசல்விலை  வரலாறு காணாத உச்சத்தில்உள்ளது இந்தியாவிலுள்ள 18 மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. 

இதனை கட்டுப்படுத்த வரியை குறை -க்க வேண்டும்.15ஆண்டுபழமையான வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவால் 6லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும். 

2005 முதல் சுங்கச்சாவடிகளில் சுங்க -க்கட்டணம்   வசூலிக்கப்பட்டு  வருகி -றது. இதை நிறுத்த வேண்டும். அதே போல் பாஸ்டேக்முறையினால்வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள -னர்.  சுங்கச்  சாவடிகளில்  தனியாக பணம் - செலுத்தும் ஒரு வழியை ஏற் படுத்த வேண்டும். மத்திய அரசு டீசல் விலையை குறைக்கவும், மாநிலஅரசு வாட் வரியை குறைக்கவும் 15 நாட்கள் கெடு விதிக்கப்படும். 

அரசுகளின் கவனத்தை ஈர்க்க, வரும் 26ம் தேதி ஒருநாள்அடையாளவேலை நிறுத்தத்தில்    ஈடுபட்டு,   அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். 
அதன்பிறகு பெங்களூருவில் நடை பெறும் மாநாட்டில், வரும் மார்ச் 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடிவுசெய்வோம்

15 ஆண்டுகளான வாகனங்கள் என் -பதை20ஆண்டாகஉயர்த்தா விட்டால் பல லட்சம் லாரி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்.  

எங்களது வேலை நிறுத்த போராட்ட -த்தில் லாரி உரிமையாளர்கள் மட்டு -மல்ல, வணிகர்கள், விவசாயிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். 
பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும். விலை உயர்வால் பாமர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சேலம்ஓமலூர் சுங்க சாவடி, சென்னையில் ஒருசுங்க -ச்சாவடி   அகற்றும்   நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
மத்தியஅமைச்சர்மாற்றுவாகனத்தை பயன்   படுத்துங்கள்  என்று கூறியுள் -ளார்.   அது  போன்ற  -வாகனங்களை கண்டுபிடித்து கொடுத்தால் ஓட்டதயா ராக உள்ளோம்.வேலைநிறுத்தபோரா ட்டத்தில் தென் மாநிலங்களில் மட்டும் 26 லட்சம் வாகனங்கள் பங்கேற்க உள்ளது. இவ்வாறு சண்முகப்பா கூறினார்.

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏