முஹம்மது நபி எனும் நிகரற்ற ஆளுமை.
முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை குறித்து சுஜித்லால் என்ற உயிரியல் ஆசிரியர் எழுதிய அழகிய கட்டுரை.
மாற்று மத சகோதரர்களுக்கு முஹம்மது நபியை குறித்தான சந்தேகங்கள் மற்றும் தவறான எண்ணங்கள் விலக இக்கட்டுரை பயன்தரும் என்று சொல்லலாம்.
நீங்கள் முஹம்மது நபியை இஸ்லாமிய பிரச்சாரகர் என்ற அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு பின்வரும் ஆளுமையை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
முஹம்மது நபி யார்.? ஏன் உலகில் மிகஅதிகம் அவர் பேசப்படுகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
முஹம்மது எனும் அனாதை சிறுவன்.
முஹம்மது எனும் ஆடுமேய்ப்பாளர்.
முஹம்மது எனும் இளைஞன்.
முஹம்மது எனும் வியாபாரி.
முஹம்மது எனும் கணவன்.
முஹம்மது எனும் தீர்க்கதரிசி.
முஹம்மது எனும் தந்தை.
முஹம்மது எனும் சீர்திருத்தவாதி.
முஹம்மது எனும் பெண்பாதுகாவர்.
முஹம்மது எனும் அனாதை பாதுகாப்பாளர்.
முஹம்மது எனும் ஏழைகளின் பாதுகாவர்.
முஹம்மது எனும் மனித உரிமை பாதுகாவலர்.
முஹம்மது எனும் அடிமை விடுதலையாளர்.
முஹம்மது எனும் அகதி.
முஹம்மது எனும் குடும்ப தலைவர்.
முஹம்மது எனும் நீதிபதி.
முஹம்மது எனும் போதை மீட்பாளர்.
முஹம்மது எனும் ஆட்சியாளர்.
முஹம்மது எனும் படைத்தலைவர்.
முஹம்மது எனும் ரானுவ தளபதி.
முஹம்மது எனும் ஆசிரியர்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக முஹம்மது எனும் மனிதர்..
கிரேக்க மற்றும் ரோமன் புராணங்களில் பேசப்படும் வாழ்க்கை அல்ல முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை.
நூற்றாண்டுகளாக செய்ய வேண்டிய காரியங்களை தன் வாழ்வில் செய்து முடித்த மகா தீர்க்கதரிசி.
அதாவது மேற்கத்தியர்களின் வார்த்தையால் சொல்வதாக இருந்தால்..
அந்த மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அநாதை பாலன் முதல் அரேபிய ஆட்சியாளர் வரை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடந்து வந்த பாதையை பரிசோதித்து பார்த்தால் முஹம்மது நபி யார்? அவர்களின் உண்மை சுயரூபம் என்ன என்பது உங்களுக்கு புரியும்.
அம்மாவின் கால் பாதத்தில் சுவனம் இருக்கிறது என கற்றுக் கொடுத்த இறைத்தூதர்.
பக்கத்து வீட்டுக்காரர் பட்டினியால் வாடும் போது வயிறு நிரப்பக்கூடாது என கட்டளைப்பிறப்பித்து அதில் சாதி பார்க்க கூடாது என்று கற்றுக் கொடுத்த தீர்க்கதரிசி.
திருடியது தன் மகள் பாத்திமாவாக இருந்தாலும் கையை வெட்டுவேன் என்று கூறிய நீதியாளர்.
வெள்ளைநிற சல்மானையும் கறுப்பு நிற பிலாலையும் ஒரே அணியில் நிறுத்தி நிற, இன பாகுபாடு கூடாது என உலகுக்கு சொல்லி கொடுத்த உத்தம தூதர்.
இறந்தவர்கள் நம் மதத்தை சேர்ந்த குழந்தைகள்இல்லையேஎனசொன்ன போது குழந்தைகளுக்கு ஏது மதம் என தனது தொண்டனை கண்டித்த கருணை நபி.
மரணத்தை நேரில் கண்ட போதும் தனது சமுதாயத்தை நினைத்து விம்மியழுத நிகரில்லா இறைத்தூதர்.
கணவனை சபிக்காதே! மனைவியை ஒரு சிறிய பார்வையால் கூட காயப்படுத்தாதே என கற்றுக் கொடுத்த குடும்ப தலைவர்.
தந்தையின் வியர்வையில் குடும்பம் நிலைபெறுகிறது என நினைவுப் படுத்திய இறைத்தூதர்.
ஒருவரின் சடலத்தை மக்கள் சுமந்து சென்றதை பார்த்த நேரத்தில் எழுந்து நின்று மரியாதை செலுத்திய போது இது இவர் நம் மதத்தை. சேர்ந்தவ. -ரல்ல என நபித். தோழர்கள் கூறிய வேளையில் இது மனிதனின் சடல மல்லவா என்று கூறி மனிதத்தை கண்ணியப்படுத்திய மாநபி.
கணவன் தலாக் சொல்வது போல அவனிலிருந்து உனக்கு திருப்தி கரமான வாழ்வு கிடைக்கவில்லை யெனில் திருப்பி உனக்கும் கணவனி லிருந்து விடைபெறலாமென கூறி ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவ நீதியை வழங்கிய நீதி நபி.
நீ ஒருவரை பார்த்து புன்னகைத்தால் அது உனக்கு தர்மம் என்று என சொல்லி தந்த ரஸூல்.
உங்களுக்கு உங்கள் மதம் அவர்க- -ளுக்கு அவர்கள் மதம்.மற்ற மதங் -களை கேலி செய்யவோ, அவமதி -க்கவோ கூடாது என்று கற்பித்த கண்ணிய நபி.
இன்னும் அவர்களை குறித்துநிறைய பேசலாம்..
வழியில் பிறருக்கு தீங்கிழைக்கும் சிறிய முள்ளைக்கண்டாலும் அதை மாற்றாமல் முன்னோக்கி செல்லக் கூடாது என்று சமூகத்திற்கு கற்றுத் தந்த தீர்க்கதரிசி..
மிகவும் செலவு குறைந்த திருமணம் தான் மகத்துவமிக்க திருமணம் என வாழ்த்திய வள்ளல் ரஸூல்.
அறிவு விசுவாசிகளின் தொலைந்து போன சொத்து அதை எங்கு கண்டா -லும் பொறுக்கி எடுத்து கொள் என நினைவூட்டிய நபி.
அனாதை குழந்தைகளுக்கு மத்தி யில் தனது குழந்தைகளை கொஞ்சி மகிழக்கூடாது என உரைத்த உத்தம நபி.
உன் விரல்களில் உன்னை அடையா ளம் காண அறிகுறி இருக்கிறது என அடையாளப்படுத்திய நபி..
பெண் குழந்தைகள் உள்ள குடும்பங் கள் நல்ல குடும்பமென கூறிய தீர்க்கதரிசி.
பெண்களை பாதுகாப்பதில்தான் சமூகத்தின் அந்தஸ்து இருக்கிறது என்று கூறிய நபி.
எவ்வளவு எழுதியும், சொல்லியும் என் வரிகள்முழுமையடையபோவதில்லை
வரிகளில் ஒதுக்கிவிட முடியாத பிரதிபாஸமே!
முஹம்மது எனும் ஆளுமையை அறிய என்னைஊக்கப்படுத்தியதற்கு என் நண்பருக்கு ஆயிரம் நன்றிகள்.
விடை பெறுகிறேன்..
பாசிசம் பிரச்சாரம் செய்து நபி நிந்தனைகளை பரப்பும் மனித தோழமைகளுக்கு..
நீங்களும் இந்த பெரிய மனிதரைக்
குறித்து கற்றுக் கொள்ளுங்கள்.
முஸ்லிம் மதத்தின் கண்ணியம், உண்மைகளை விளங்கிக் கொள் -ளலாதமுஸ்லிம்பெயர்தாங்கிகளான பயங்கரவாதிகளின் சிறைச்சாலையி -லிருந்து மனிதாபிமான மிக்க முஹம்மது நபியை விடுதலை செய்யுங்கள்..
நமது பாரத வேதங்களிலும் முஹம்மது நபியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதாம்.
அதைப்பற்றி நான் படிக்கவில்லை..
சமஸ்கிருதம்கற்றுத்தெரிந்தகொண்ட அறிஞர்கள் உண்மையை
Comments
Post a Comment