பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர்கேப்டன் அம்ரீந்தர் சிங் ஆகியோருக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“1941 முதல் செயல்பட்டு வரும் நாட் -டின் பழம்பெரும் பல்கலைக் கழக மான சண்டிகர் பல்கலைக் கழகத் -தில், உலகின் முதன்மை மொழி என்று போற்றப்படும் செம். மொழி யாம் தமிழ் மொழி மீது கொண்டுள்ள ஆர்வத்தால் 1960களில் அப்போதைய காங்கிரஸ் கட்சிகுருதாஸ்பூர்தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த
திரு.இ.சி.சர்மா அவர்களால் தென்னி ந்தியமொழிகள்துறைதொடங்கமுடிவு செய்யப்பட்டு அதில் முதலாவதாக தமிழ் மொழிக்கு தனித்துறை தொட -ங்கப் பட்டது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பல் கலைக்கழகத்தில் 2001ஆம் ஆண்டு முதல் தமிழ்த் துறைக்கு பேராசிரியர் நியமிக்கப்படாமல் இன்று வரை கட -ந்த 20 ஆண்டுகளாக சண்டிகர் பல் -கலையின் தமிழ்த்துறை செயற்படா -மல் இருப்பது. இந்தியாவின் தமிழ் நாடு, புதுச்சேரிமட்டுமின்றிமலேசியா சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் உள்பட அதிகமான உலக நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தமிழின ஆர்வ -லர்கள், தமிழ் அறிஞர்களை பேரதிர் ச்சியிலும், பெரும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த பல்கலையின் தமிழ்த்துறைக்கு ஒதுக்கப்படும் மத்திய அரசின் பல் கலைக்கழக மானியக் குழுவின் நிதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகளின் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
சென்ற 2019 ஜூலை 20ஆம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அவர்கள் ;சட்டசபையில் விதி எண். 110ன் கீழ் செய்த. “பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பணியிடத்திற் காக ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் நிதி அளிக் கப்படும்” என்ற அறிவிப்பிற்குப் பிறகும் தமிழ்த் துறைக்கு பஞ்சாப் அரசு உயிர் கொடுக்காதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
மேற்கண்ட தமிழக முதல்வரின் அறிவிப்பு சண்டிகர் பல்கலைநிர்வாக - த்திற்கு முறைப்படி தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுஇரண்டுஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இதுகுறித்து பல்கலை நிர்வாகம் எந்த பதிலும் இதுவரை அளிக்காமல் மௌனம் காக்கிறது.
ஆகவே, தாங்கள் இவ்விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி சண்டிகர் பல்கலையின்தமிழ்த்துறைக்குஉதவிபேராசிரியரை உடனடியாக நியமிக்க ஆவண செய்து, தமிழ் மக்களின் மனதைக் குளிரச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
Comments
Post a Comment