சாமானியனின் பார்வையில் 'வேளாண் சட்டங்கள்'!!...

நம்மல்ல பல பேருக்கு, 'வேளாண் சட்டங்கள்' ஏதோ நாத்து நடுறதுல தொடங்கி, அறுவடைல முடியிற ஒரு சம்பிரதாயம்ன்னு தான் நினைக்கி றோம் அதுவும் இப்போ நடக்குற போராட்டத்துக்கு 'விவசாயிகள் போராட்டம்'ன்னு பட்டம் கட்டி ஒரு சாராருக்கான போராட்டம்ன்னு ரொம்ப லேசுலகடந்துபோய்டுறாங்க. 
அப்படித்தான், இப்ப வர indiaTogether டிவீட்டுகளையெல்லாம் என்னால் எடுத்துக்க முடியுது. இந்த வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்துட்டா, நம்ம தினசரி காய் வாங்குற மார்க்கெட்டே காணாமல் போகும் அபாயம் இருக்கு -ன்னு உங்களுக்கு தெரியுமா?...

ஒரு நாள் நான் காய்கறி வாங்க மார்க்கெட்க்கு போனேன், அங்க வழக்கத்துக்கு மீறி, ஒரு காய்கறி வியாபாரியைபாத்துமத்தவியாபாரி
கள் எல்லாம் கண்டமேனிக்குதிட்டிட்டு இருந்தாங்க. என்னன்னு கேட்டா, அவன் வெளி மார்க்கெட் வியாபாரி -யாம், அந்தசம்பந்தப்பட்டகடைக்காரர் இவர இங்க விட்டுட்டு,வேறமார்க்கெட் போய்வியாபாரம்பாக்கபோய்ட்டாராம்

 பல வருஷமா நேரடி வியாபாரிகள் இருக்குற மார்க்கெட்ல இப்படி வெளி ஆள் வந்து வியாபாரம் பண்ண கூடா தாம், அது அவங்க சங்கத்தோட விதிக்கு எதிரானதாம்.

இப்ப விஷயத்துக்கு வருவோம், கன்னியகுமாரில  இருக்குற விவசாயி, தன்னோட பொருளை காஷ்மீர் வரைக்கும் போய் விக்கலாம்ன்னு சொல்லுது 'புதிய வேளாண் சட்டம்'. 

இது சிறு, குறு விவசாயிகளுக்கு சாத்தியமே இல்லை,கார்ப்பரேட்டுக்கு சாதகமானதுங்குறதெல்லாம் வேற விஷயம். அப்படியே அது சாத்தியம் -ன்னு வாதிட்டாலும், இங்க இருக்குற ஒரு டெல்டா விவசாயி,ஆந்திராவரை 
போய் வியாபாரம் பண்ணலாம்ன்னு தன்னோட பொருளை எடுத்துட்டு போனாலும், அவரால ரோட்லலாம் உக்காந்து வியாபாரம் பாக்க முடியாது, அவரும் எங்கயாவது மார்க்கெட் போய் தான் தன்னோட பொருளை வித்தாகணும். அங்கேயும் 'வியாபாரிகள் சங்கம்'ன்னு கண்டிப்பா ஒன்னு இருக்கும். அவங்களை எதிர்த்து அங்க வியாபாரம்பண்ணுற பட்சத்துல, அங்க அவருக்கோ, அவர் பொருளுக்கோ ஏதாவது நடந்தா, அவரால Case கூட போடமுடியாது. மொத்தத்துல, விவசாயிகள் வியாபாரியானா, அவர்களுக்கான 'தொழில் பாதுகாப்பு'பத்தி எதையுமே சொல்லலை இந்த வேளாண் சட்டங்கள்.
அதே போல, இடைத்தரகர்களை ஒதுக்கிட்டு அந்த இடங்கள்ல கார்ப்பரேட்டை கொண்டுவந்து வெச்சிக்கசொல்லுது, 'புதிய வேளாண் சட்டங்கள்'. சரி, அப்போ மார்க்கெட் வியாபாரிகளுக்கு இடைத்தரகர்களுக்கு பதிலா, கார்பொரேட்கள் பொருட்களை குடுத்து வாழவைப்பாங்கன்னு சொல்லவருது போல. அப்போ, அதுவும் எவ்வுளவு நாளைக்குன்னு நம்மளால சொல்ல முடியாது.

'இடைத்தரகர்களை காலி பண்ணது க்கே நமக்குஇவ்வுளவு லாபம் வருதே அப்போ மார்க்கெட் வியாபாரிகளை யும் காலி பண்ணிட்டா, மொத்தத்தை யும் நாமளே சம்பாதிக்கலாமே'ன்னு, மார்க்கெட் வியாபாரிகளுக்கு எதிர்க் -கவே, கார்ப்பரேட்கள் கடைய விரிச்சி, அவங்க வாழ்க்கையை காலிபன்னா -லும் வியாபாரி சங்கங்களால எதையுமே செய்யமுடியாது. 

அப்படியே யாரவது போய் நியாயம் கேக்க போனா, அவங்களோட கடை களை இவங்க அடிச்சி ஒடச்சாலும், யாராலயும் Case போட முடியாது. அப்போ நாள் பட நாள் பட மார்கெட்டு -கள் மெல்ல அழியும் அபாயம் இதில் உண்டு.

நமக்கு தினமும் 10,20'ன்னுவிலையை குறச்சி குடுக்குறஅண்ணனும்இருக்க மாட்டாங்க, நம்ம Flat'க்கு கீழ தள்ளு வண்டில காய்கறி விக்கிற, 'மீதி 20 ரூபா நாளைக்கு தரேன்'ன்னு சொன்னாலும் விட்டுகுடுத்துட்டு போற அக்காவும் இருக்க மாட்டாங்க. 

90'ஸ் கள்ல ஸ்கூலுக்கு வெளிய நெல்லிக்கா வித்த கடைக்காரம்மா காணாம போன மாதிரி, இவங்களும் காணாம போய்டுவாங்க. அப்புறம் என்ன, இப்போ நிறைவேத்துன சட்டத்தோட கோட்டையெல்லாம் அழைச்சிட்டு, முதலாளிகள் வெக்குறது தான் சட்டம்.
இது, இதோட நிக்காது. பின்னாடியே Meat, Fish'ன்னு எல்லா அடிப்படை விஷயத்துலயும் கைவெக்க ஆரமிச்சிடுவாங்க. கறிக்கடை பாய்'லாம் நியாயம் கேக்க போனா, என்னெல்லாம் பட்டம் சூட்டுவாங்க -ன்னு நமக்கே தெரியும். 

நான் கால மாற்றத்திற்குஎதிரானவன் இல்லை, ஆனா, நம்ம வாழ்வை மேம் படுத்துறேங்குற பேருல, நம்ம வாழ் வியலையே அழிக்கிற இந்த மாதிரி நடவடிக்கைகளெல்லாம் நம்ம கேள்வியே கேக்காம விட்டுட்டா, நாளைக்கு சோத்து பருக்கையை Frame பண்ணி தான் மாட்டிக்கணும்.

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏