இலவசம்! சிந்திப்பீர் வாக்களிப்பீர்

ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது..!!

அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன..!!

மேலும், ''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்'' 

என்றொரு குறிப்பும் இருந்தது..!!

தம்பதிகள்இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால்
யார்..?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை..!!

இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை அவர்கள் எடுத்துக் கொண்டு இருவரும் அந்த திரைப் படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்..!!

வீட்டை திறந்தவர்களுக்கு
ஒரே அதிர்ச்சி..!! 

வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன..!!

வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது அதில், "என்னா..?? படம் சூப்பரா..??" என்று எழுதியிருந்தது..!!அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது..!!
"ஐயோ..!! களவாணிப்பயலா அவன்..??" என்று..!!

நீதி: ''இலவசம்'' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே..!!

உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை..!! 

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!!

அதுவும் எதிர்வரும் ஏப்ரல் 6  தீவிரமாக சிந்திப்போம்!செயல்படுவோம்.......!!!

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏