ஆட்சியை இழந்தது காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவினார் நாராயணசாமி:

நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தோல்வியில் முடிந்ததை யடுத்து, காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் அண்மையில் பதவியை ராஜி -னாமா செய்தனர். இதனால், சட்டப் பேரவையில் காங்கிரஸ் -தி.மு.க கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 14 ஆக குறைந்தது. நியமன எம்எல்ஏக்களுடன் சேர்த்து எதிர்க் கட்சிகளின் பலமும் 14 ஆக இருந்த தால், சட்டப்பேரவையில் திங்கள் கிழமைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

அதன்படி, சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை திங்கட்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபாநாயகர் சிவக் கொழுந்துவை ஞாயிறன்று சந்தித்த ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார்.

பின்னர்தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், கட்சி யில் முக்கியத்துவம் அளிக்கப்படாத தால் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.

லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், தட்டாஞ்சாவடி சட்டமன்றதொகுதி   
திமுகஉறுப்பினர்வெங்கடேசனும் 
பதவியை ராஜினாமா செய்தார். 
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதம் குறித்து, சட்டத்துக்கு உட்பட்டு முடி வெடுக்கப்படும் என சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
12 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர் நாராயணசாமி.நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது 30 நிமிடங்களுக் கும் மேலாக பேசினார்.
நாராயணசாமி. அதனையடுத்து அவையை விட்டு வெளியேறினார் நாராயணசாமி. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏