மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் M.H.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
பெருமுதலாளிகளுக்கு நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங் -களை விற்பனை செய்து அதன் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் ஈட்ட உதவும் வகையில் தான் நாடா ளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைஅமைந்துள்ளது.
கொரோனா பெருந்தோற்று மற்றும் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களை நீக்க இந்த நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமில் லாமல் அதற்குப் பதிலாககொரோனா காலத்திலும் பலமடங்கு லாபத்தைச் சம்பாதித்த பெருநிறுவனங்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களான பெட்ரோலிய நிறுவனங்கள்காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், மின் நிறுவ னங்கள், விமான நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களைத் தனியா -ருக்கு விற்று நாட்டின் பொருதாளா -ரத்தை படுகுழியில் தள்ள மத்திய அரசு முயன்றுள்ளது.
தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல் -லும் பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுக்கொள் கொண்டுவருவதைத் தவிர்த்து அதற்கு புதிய வரியைப் பிறப்பித்து பெட்ரோல் டீசல் விலையை உயர்வைச் சாமானிய மக்கள் மீது சுமத்தியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
பெரும் முதலாளிகளுக்குச் சாதக மான இந்த நிதிநிலை அறிக்கை நடுத்தர மக்களின் நலன் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. வருமான வரி வரம்பில் எவ்வித சலுகையும் அளிக்கப்படவில்லை.
எரிபொருட்களை. ஜிஎஸ்டி வரம்பிற் -குள் கொண்டு வராதது பெரும் ஏமா -ற்றத்தை அளித்துள்ளது. எரிபொருள் வரியிலிருந்து. கிடைத்த ரூ19லட்சம் கோடியை பகிர்ந்தளிக்க்காததும் GST விகிதத்தைக். குறைக்காததும் சரி யான நடவடிக்கையாக அமைய வில்லை.
நமது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்பிற்கு உள்ளாக்கும் நோயை கண்டுபிடிக்காமல் தவறான மருந்தை அளிக்கும் மோசமான நிதிநிலை அறிக்கையாக இது அமைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மந்த நிலைக்குள் தள்ளும் வகையில் தான் இது அமைந்துள்ளது.
சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் தூரப் பார்வையில்லாமல் இந்தியா -வை பெரும்முதலாளிகளுக்கு விற் -பனை செய்யும் அறிவிப்பாகவே இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது. என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் M.H.ஜவாஹிருல்லா தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment