அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும் இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:
கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர் -களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3,000 ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கொரோனா   பெருந்தொற்று  காலத் தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலா -ளர்கள் அடைந்துவரும் துயரங்களை குறைக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
அரசு அங்கீகார அட்டை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட  அடையாள அட்டை, இலவசப்பேருந்து அட்டை போன்ற அரசால் அங்கீகரிக் கப்பட்ட ஏதாவது ஒன்றை வைத்திருப் பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பால்  மிகப் பெரும்பாலானபத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பயனளிக்காமல் போய்விடும். 
ஒரு பத்திரிகை மற்றும் ஊடகத்தில் பணியாற்றும் அனைவரும், அரசு அங்கீகார அட்டையோ, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கும் அடையாள அட்டையோ அல்லது இலவச பேருந்து அடையாள அட்டையோ வழங்கப்படுவதில்லை.

ஒரு பத்திரிகையில் பணியாற்றும் மிக முக்கிய நபர்களுக்கும், வெளி யூர்களுக்கு பயணிக்கும் ஊடக நபர் களுக்குமே மேற்குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகள் வழங்கப் படுகிறது.

இதனால் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர்கள் என பணியாற்றும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக வியலாளர்களுக்கும் பலன்கள் கிடைக்காத சூழல் உள்ளது.

எனவே,   ஆர்.என்.ஐ    (REGISTRAR OF NEWSPAPERS FOR INDIA)RNI யில் பதிவு செய்து கடந்த 5 ஆண்டுகளாக தொட -ர்ந்து பத்திரிகை மற்றும் ஊடகத்தை நடத்திவரும் நிறுவனங்களில் பணி யாற்றும் அனைவருக்கும்கொரோனா இழப்பீடு    மற்றும்   ஊக்கத்  தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என மனிதநேயமக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு