சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி முகாம்

தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் மாவட் -டங்களில் தினந்தோறும் மருத்துவ  பரிசோதனை மற்றும் தடுப்பூசி  முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களால்  தினந்தோறும் ஓவ்வொரு பகுதிகளுக்கும் பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
அவ்வப்போது ஆத்தூர் நகராட்சி ஆணையாளர்   திருமதி தேவி
அவர்களின் அறியுறுத்தலின்படி    24/06/2021 அன்று  பொதுமக்களுக்கு கோவாக்சின்  இரண்டாவது தவணை தடுப்பூசி முகாம் ஆத்துர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் நடைப் பெற்றது. இம்முகாமில் 120 பேர் கலந்து கொண்டுபயனடைந்தனர்.
இம் முகாமில் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினோத்குமார் ஆத்தூர் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர்
-கள் பிரபாகரன், மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

The World Water War 1999- 2001 took place in the city of Cochabamba, Bolivia.

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

Meet Nigar Shaji, Aditya L1 project director from Tamil Nadu