சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் பொதுமக்களுக்கு கோவிசீல்டு தடுப்பூசி முகாம்

தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் மாவட் -டங்களில் தினந்தோறும் மருத்துவ  பரிசோதனை மற்றும் தடுப்பூசி  முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களால்  தினந்தோறும் ஓவ்வொரு பகுதிகளுக்கும் பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அவ்வப்போது ஆத்தூர் நகராட்சி ஆணையாளர்   திருமதி தேவி
அவர்களின் அறியுறுத்தலின்படி      பொதுமக்களுக்க கோவிசீல்டு தடுப்பூசி முகாம்  26/06/2021 அன்று ஆத்துர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் நடைப்பெற்றது. இம்முகாமில் 100 க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுகொண்டனர்.
இம்முகாமில் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினோத்குமார், ஆத்தூர் நகராட்சி துப்புரவு  அலுவலர்  திருமூர்த்திமற்றும் துப்புரவுஆய்வாளர்கள் பிரபாகரன், மற்றும் குமார் துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள்மல்லிகா ராமசாமி,மாது,பன்னீர்செல்வம்  மேரி முத்தைய்யா பரிசோதனை நிபுணர்
கள் முத்துக்குமார்  கார்த்திகா தீபாஶ்ரீ பரப்புரையாளர்கள் வினித் குமார்  விஜய்ஶ்ரீதர்,மணிகண்டன் மற்றும் கண்ணதாசன்  வருவாய் ஆய்வாளர்கள் நாகராஜ் ராஜா அண்ணாமலை  ஆகியோர் கலந்து கொண்டு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏