சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி முகாம்
கொரானா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் தினந்தோறும் மருத்துவபரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தல்
செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணை -யாளர்களால் தினந்தோறும் ஓவ் வொரு பகுதிகளுக்கும் பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்களின் அறியுறுத்தலின்படி பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி முகாம் 25/06/2021 அன்று ஆத்துர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் நடைப் பெற்றது. இம்முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுகொண்டனர்.
இம்முகாமில் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினோத்குமார், ஆத்தூர் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும். துப்புரவு ஆய்வாளர் கள் பிரபாகரன், மற்றும் குமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மல்லிகா
ராமசாமி, மாது பன்னீர்செல்வம்
பரிசோதனை நிபுணர்கள் பரப்புரை -யாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment