ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

“எங்கள் இரட்சகனே! எங்கள்மனைவி -யரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! 

இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74

யா அல்லாஹ்!
நீ எங்களுக்கு அளித்த சிறந்த அருட் கொடைகளில் எங்கள் குடும்பமும் ஒன்று.

அதற்காக உன்னைப் புகழ்கின்றோம் நன்றி செலுத்துகின்றோம்

யா அல்லாஹ்!
எங்கள் குடும்பத்தினரை உன்னிடத்தில் ஒப்படைக்கின்றோம்.

அவர்களை கொடிய நோய்கள் அணுகாமல் காப்பாயாக
நல்ல உடல்  நலத்துடன் நீண்ட ஆயுளைத் தருவாயாக!!

கெடுதி நினைப்போர்களின் கெடுதியில் இருந்தும்,பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும் அவர்களைக் காப்பாயாக!

எங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பையும் பாசத்தையும் உருவாக்குவாயாக!!

நேர்வழியில் நடத்தாட்டுவாயாக

நேர்வழியில் நடப்பவர்களுடன் இணந்திருக்கச் செய்வாயாக!!

அவர்கள் உன்னை தொழுபவர்களாக திக்ரு செய்பவர்களாக என்றென்றும் உன் வழியில் நடப்பவர்களாக ஆக்குவாயாக!!

எதிர் பாராத விபத்திலிருந்தும் துர் மரணத்திலிருந்தும் அவர்களைக் காப்பாயாக!!

இம்மை மறுமைக்கான கல்வியறிவு பெற்றவர்களாக கற்றலின் படி செயல்படுபவர்களாக அவர்களை உருவாக்குவாயாக!

அவர்களுடைய தேவையை நிறைவேற்றுவாயாக!!

பசி, பட்டினி, துக்கம், கவலை, வறுமை பற்றாக்குறை போன்றவைகளிலி
ருந்து அவர்களைப் பாது காப்பாயாக!!

குடும்பத்தினர் அனைவரும் இம்மை மறுமைக்கான அனைத்து நலனும் பெற்று வாழ தவ்ஃபீக் செய்வாயாக!!

யா அல்லாஹ்!! 
உன்னையன்றி யாரிடமும் எதற்காகவும் கையேந்தாத நிலையை அவர்களுக்கு உருவாக்குவாயாக!!
எங்களை சொர்க்கத்தில் ஒன்றிணை-ப்பாயாக!! ஆமீன்!ஆமீன்!!

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்