Posts

Showing posts from July, 2021

Eid al-Adha 2021

Image
In the wake of a probable third wave of COVID-19, Bakrid 2021 will remain a low-key affair this year and people will avoid big-scale celebrations to mark the special occasion. Here are a bunch of quotes, images, and wishes that you can send to your friends, family and relatives on the festival. Eid al-Adha 2021, also known as Bakrid 2021 is one os the much-awaited festivals of the Muslims. Festivals bring out the happiness in people and this one is no different as the community all across the world celebrate this day with their close ones and pray for each other's good health. Eid Al-Adha Festival brings the joy of good food, trendy clothes, gifts and celebrations. Prayers are offered to Allah and an animal (bakra, as the name suggests) is sacrificed and divided into three parts  While one part is given to the relatives, friends and neighbours, the second part is offered to the needy and poor, and ...

அரசு சுகாதாரத்துறையும் மற்றும் உதகை நகர தமுமுக மருத்துவ சேவை அணியும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம்

Image
அரசு சுகாதாரத்துறையும் மற்றும் உதகை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மருத்துவ சேவை அணியும் இணைந்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் உதகை  முஹம்மதியா ஷாதி மஹாலில் 04/07/2021 அன்று  காலை 10:00 மணி அளவில்  தொடங்கப்பட்டது. இம் முகாமானது  நீலகிரி  மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமை யில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரியாஸ்  ஏற்பாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஊட்டி அபுதாஹிர் மாநில விளையா -ட்டு  அணி துணை  செயலாளர் சாதிக்பாட்சா   தமுமுக மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி  மமக மாவட்ட செயலாளர் சேக் தாவூத் மாவட்ட துணை தலைவர் அக்பர் அலி மாவட்ட விவசாய அணி செயலாளர் சானவாஸ் மற்றும்  பல்வேறு மாவட்ட நகர கிளை நிர்வாகிகள்  முன்னிலையில் இந்நிகழ்வை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் துவக்கி வைத்தார். முகாமில் தன்னார்வளர்கள் மற் -றும்  பொது மக்கள் என 260 நபர் -களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது. ...

குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

Image
தேனி அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த போது காவல்துறையினர் தன்னை தாக்கியதாக குடும்பத்துடன் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த வர் ஜெயபிரபு வழக்கறிஞரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோம்பைத்தொழு கிராமத்தில் நடை பெற்ற கோஷ்டி தகராறில் மயிலாடும் பாறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.  மேலும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்  வைத்திருந்ததாக  அவர்  மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே விசாரணையில்இருந்த ஜெயபிரபு டியூப் லைட் பல்பை கடித்து தின்றதால் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில்,காவல் துறையினர் தன்னை தாக்கியதாக ரத்தக் காயத்துடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக நின்று அலப்பறை செய்தார். அவருடன் ஜெயபிரபுவின் மனைவி மற்றும...

ஒன்றிணைவோம் "வா" திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்

Image
மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி  ஸ்டாலின் MLA அவர்கள் துவக்கி வைத்ததையொட்டி சேலம் கொரோனா தடுப்புபணி பொறுப்பா -ளர் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில் சேலம் கிழக்கு மாவட்டபொறுப்பாளர்  S. R. சிவலிங்கம்  Ex.M L A அவர்கள் அறிவுத்தலின் படி ஆத்தூர்  நகரகழக செயலாளர் K. பாலசுப்பிரமணியம் மற்றும் முல்லை P.பன்னீர்செல்வம் ஆகியோர்  தலைமையில்  03/07/2021 அன்று  7 வார்டு முல்லைவாடி பகுதி யில்  அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 7வது வார்டு பொறுப்பாளர் PRS பாண்டியன் (எ) ராஜா  7வது வார்டு முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன் 7வது வார்டு செயலாளர் சோட்டாபாய் வார்டு பிரதி நிதிகள் சக்கரவர்த்தி,முருகேசன் மணிகண்டன் சீத்தாராம் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் வயிற்றில் பால்வார்த்த தமிழக அரசு அதிமுக அரசு எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் தூக்கியடித்து உத்தரவு

Image
ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து:  பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு... ஊதிய  உயர்வு  பழைய ஓய்வூதிய திட்டத்தை  மீண்டும்  செயல்படுத்த  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரி க்கைகளைவலியுறுத்திஆசிரியர்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  அவர்கள் மீது கடந்த ஆட்சியில்  ஏராளமான வழக்குகள் தொடுக்கபபட்டதுடன் ஒழுங்கு நடவடிக்கையும்மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரி யர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். இந்த நிலையில்  ஆசிரியர்கள், கல்வி துறை பணியாளர்கள் மீதானஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும்  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவு  பிறப்பித்துள்ளார். 17B பிரிவின் கீழ் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்து, பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்...