தேனியில் தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9clQXsPuP-KCG_I01SlYDG2_fvjkmn40G4yCya5R76CfuY6aTHbe0t-nygDBQ1H6A67qBzCZKIp8ozkroU6yGlo9oURvz0-dgpKsPUQEiuZBK1QBCW5fgGV8hwfUTxeFSxborB_MCEUg/s1600/1640952877593575-0.png)
தேனியில் தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 30/12/201 அன்று தேனி பங்கள மேட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் நல கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும். விதமாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பட்டயமருந்தாளுநர் களின் வேலை வாய்ப்புஉரிமையினை பறிப்பதை கைவிட கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத் தலைவர் நாகராஜ் மாநில பொருளாளர் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் தேனி பங்கள மேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவத் துறையில் இருக்கின்ற மருந்தாளுநர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பகோரியும்,பட்டயமருந்தாளுனர் களுக்கு வேலை வாய்ப்பினைவழங்க கோரியும்,பட்டய மருந்தா ளுநர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறிப்பதை கைவிடக் கோரியும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பட்டய மருந்தாளுநர் களுக்கு அமுல்படுத்திய நீதிமன்ற தீர்ப்பினை தமிழகத்திலும் அமுல் படுத்தக்கோரியும், மருத்துவத...