தேனியில் ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

தேனி:
தேனி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டி தனியார் மஹாலில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் முல்லை அழகர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலை வைத்தார். 
கூட்டத்துக்கு வந்த அனைவரையும் கிழக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் விஸ்வைகுமார், மாநில அமைப்பு செயலாளர் திலீபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார்கள்.
இந்த கூட்டத்தில்தமிழகத்தில் கடந்தமூன்றுமாதங்களில்தொடர்ந்து 
அருந்ததியர் இன மக்களை தாக்கி வருவதை தடுக்க  தமிழக முதல்வர்  தனி கவனம் செலுத்தப்படவேண்டும்.
மேலும் சாதிஆணவக்கொலைகளை 
தடுக்க தமிழக முதல்வர் தனி சட்டம் இயற்றி பாதுகாத்திட வேண்டும் என்றும், ஆதி தமிழர் கட்சியின் வளர்ச்சி குறித்தும்  , ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைக் கைதி களாக உள்ளவர்கள்அனைவரையும் 
விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.கூட்ட முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் தங்கபாண்டி நன்றி கூறினார்.
இச்செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்