தேனி மாவட்டத்தில் ஒக்கலிக கவுடர் சங்கத்தின் சார்பில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா
தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் சார்பில் பிளஸ்-2 மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு மற்றும் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கான பாராட்டு விழா தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி சந்திர பாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு கல்வி காப்பு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முருகேசன், அறங்காவலர் ரகுபதி, தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க கௌரவ தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க தலைவர் பிரகாஷ் வரவேற்றார்.
விழாவின்போது தேனி மாவட்ட ஒக்கலிக மகாஜன சங்க செயலாளர் விஸ்வநாதன் சங்கத்தின் செயல் பாடுகள் குறித்த அறிக்கையையும், பொருளாளர் மும்மூர்த்தி நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர்.
இவ்விழாவில் தமிழக ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் கௌரவ தலைவரும், ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனருமான ஓ.ஆறுமுகசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஒக்கலிக கவுடர் சங்கத்தின் நிர்வாகிகள், சமுதாயத்தை சேர்ந்த பெண்கள், மாணவ, மாணவிகள் கலந்து ஏராளமானோர் கொண்டனர்
Comments
Post a Comment