பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2,00,000/- லிருந்து ரூ.2,50,000/- ஆகஉயர்வு அரசு ஆணை ஆட்சியர் தகவல்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
2021 -2022 ம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2,00,000/- லிருந்து ரூ.2,50,000/- ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவி யருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது
மேலும் 2021-22 ம்ஆண்டிற்கானமுதுகலை M.A., M.COM.,M.SC.,M.Phil M.B.A., Phd, பாலிடெக்னிக் டிப்ளமோமூன்றாண்டு பட்டயப்படிப்பு தொழிற்படிப்பு மருத்துவ படிப்புகளானM.B.B.S.,கால்நடைமருத்துவம் பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும், வேளாண்மை பொறியியல் சட்டம் போன்ற படிப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள் புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளம் அறை எண்.110-ல் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும்சிறுபான்மை யினர் நல அலுவலக தொலைப்பேசி எண்: 0427-2451333 அல்லது பிற்படுத்தப் பட்டோர் நல இயக்க மின்னஞ்சல் முகவரி dirbcmw @nic.in மற்றும் தொலைப்பேசி எண்: 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அணுகி பயன் பெறலாம் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment