பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பு செய்திடும் மீன் வளர்ப்போரருக்கு 40% சதவீதம் மானியம் ஆட்சியர் தகவல்
சேலம் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம்
2021-2022 - ம் ஆண்டிற்கு பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பு செய்திடும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களிடமிருந்து கீழ்காணும் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது
பல்நோக்கு பண்ணைகுட்டைகளில் கூட்டு மீன்வளர்ப்பில் இந்தியபெருங் கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை ஊக்குவித்தல் திட்டத்தினை செயல்
படுத்திட ஏற்கனவே பயனாளிகளால் அமைக்கப்ட்ட 1000 ச.மீ பரப்பில் உள்ள பண்ணைகுட்டகளை புனரமைத்
திடவும் மற்றும் கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங் கெண்டைமீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை மேற்கொள்ள ஆகும்மொத்த
உள்ளீட்டு செலவினத் தொகை
ரூ.62,500/-ல்40%மானியமாக
ரூ25,000/வழங்கப்பட உள்ளது.
பண்ணைகுட்டைகளில் நீர் சேமிப்பு திறனை மேம்படுத்திட பாலித்தீன் உறைகளிட்டுமீன் வளர்த்தல் திட்டத் தினைசெயல் படுத்திட பண்ணை குட்டைகள் அமைத்து மீன்வளர்ப்பில் ஈடுப்பட்டு வரும் மாவட்ட மீன்வளர்ப் போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர் களுக்கு 1000 ச.மீ பரப்பில் உள்ள பண்ணை குட்டையில் பாலித்தீன் உறைகளிட்டு மீன்வளர்ப்பு செய்திட ஆகும் மொத்த தொகை ரூ.1,87,500/-ல் 40% மானியமாக ரூ.75,000/- வழங்கப்பட உள்ளது.
விரால் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்குதல் திட்டத்தினை செயல் படுத்திடஇம்மாவட் டத்தில் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள நபர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் விரால் மீன்வளர்ப்பு பண்ணை களுக்கு ஆகும்மொத்த இடு பொருட் கள் செலவினத்தொகை ரூ.75,000/- ல்
40% மானியமாக ரூ.30,000/- வழங்கப்பட உள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் உரிய விண்ணப்பபடிவ த்துடன் உரிய ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்பஅட்டை, நிலத்தின் பட்டா, சிட்டா மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் உறுப்பினருக் கான இரசீது ஆகியவற்றுடன்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் இத்திட்டத்தில் பயன் பெற விரும்பு வோர் மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், மேட்டூர் அணை (அலுவலக தொலை பேசி எண்: 04298- 244045) என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சி த்தலைவர் கார்மேகம்
தெரிவித்தார்.
Comments
Post a Comment