சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 06.12.2021 மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி,மாற்றுத்திறனா ளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரண ங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 512 மனுக்கள் வரப்பெற்றன. 
இக்கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அந்தந்த துறை அலுவலர் களிடம் வழங்கி பொதுமக்களின் தகுதியான மனுக்களின் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதேபோன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்
கான குறைதீர்க்கும் கூட்டத்தில்மாற்று திறனாளிகள் வழங்கிய 12 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கினார். 
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சத்தியபாலகங்காதரன் உதவிஆணையர்(கலால்)தனலிங்கம் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன்,மாவட்டஆதிதிராவிடர்
 நல அலுவலர் திருமதி சரளா உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு