நரசிங்கபுரம் நகராட்சி அனுமதியில்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகள் மீது நடவடிக்கை
நரசிங்கபுர நகராட்சியின் அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகள் பல உள்ளதாகவும் அவற்றை முறைப்படுத்தி நகராட்சி குடிநீர் கட்டண வரம்புக்குள் கொண்டு வர ஆணையாளர் நடவடிக்கை
நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து (18) வார்டுகளுக் கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவிற்கிணங்க, நகர்ப்புற உள்ளாட்சி துறைஅமைச்சர் நேரு அவர்களின் வழிகாட்டுதலின் படியும், நகராட்சி நிர்வாக இயக்குனர்,சென்னைமற்றும்மண்டலஇயக்குனர் சேலம் அவர்க ளின் உத்தரவின்படி தினசரி குடிநீர் விநியோகம் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
நகரின் அனைத்து தரப்பு மக்களும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் ஆணையாளர் செய்யது உசேன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகரின் பல இடங்களில் கடந்த காலங்களில் அனுமதி இன்றி தன்னிச்சையாக நகராட்சியின் முறையாக அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பல உள்ளதா கவும் அவற்றை முறைப்படுத்தி நகராட்சி குடிநீர் கட்டண வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக உள்ளது.
எனவே இவ்வறிவிப்பு வெளியிட்ட மூன்று தினங்களுக்குள் அனுமதி யற்ற குடிநீர் இணைப்புகளை பொது மக்கள் தாமாக முன்வந்து முறைப் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து வேலை நாட்களிலும் நகராட்சி பொறியியல் பிரிவில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்கள் இணைத்து மிள சமர்ப்பித்து தங்களது குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டு மெனவும், நகராட்சி அலுவலர்கள் கண்டறியப்படும் இணைப்புகள் உள்ள நபர்கள் காவல் துறையின் மூலம் புகார் அளிக்கப்பட்ட கிரிமினல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும், எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே பொது மக்கள் இந்த வாய்ப் பினை பயன்படுத்தி தங்களது அனுமதியற்ற இணைப்புகளை உடனடியாக விரைந்துமுறைப்படுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் திரு.செ.அ.செய்யது உசேன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments
Post a Comment