இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தேனி மாவட்ட SP பிரவீன் உமேஷ் டோங்ரேயிடம் கோரிக்கை மனு
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் யாசர் அராபத் தலைமையில் தேனி மாவட்ட காவல்அலுவலகத்தில் SP பிரவீன் உமேஷ் டோங்ரேயிடம் கோரிக்கை மனு
தேனி அருகே மொழிவாரியாக சிறுபான்மை என்ற அடிப்படையில் தமிழக அரசின் உயர்கல்வித் துறை யில் பல சலுகைகளை பெற்று சௌராஷ்டிரா கல்லூரியில்,
கடந்த இருபத்தி எட்டாம் தேதி முதல் 1-ஆம் தேதி வரை RSS அமைப்பு சாரா என்ற பெயரில் தடிகள் சுத்திகள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு ஆயுதப் பயிற்சி நடைபெறுகிறது
மிக அமைதியாக எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் அனைத்து சமூக மக்களும் சகோதரத்துவம் ஆக உறவினராக வாழும் இந்த மாவட்டத்தில் ஆயுதப் பயிற்சி வகுப்புகள் மிகப்பெரிய பிரிவினையை ஏற்படுத்ததும்
மேலும் அனைத்து சமுதாய மாணவர்கள் பயிலும் ஒரு கல்லூரியில் மத ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் ஒரு அமைப்பின் பயிற்சி என்பது மிக ஆபத்து என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்
தற்போது கொரானா கட்டுப்பாடு உள்ள நேரத்தில் இதுபோன்ற ஆயுதப் பயிற்சி முகாம் நடத்துவது நோய் தொற்று விதி மீறல் ஆகும் .
எனவே கல்லூரி நிர்வாகம் மீதும் RSS அமைப்பின் மீதும் நோய்தொற்று விதிமீறல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உடனடியாக இந்த பயிற்சி முகாமினை தடுக்கவேண்டும் என்றும் மாவட்டம் முழுவதும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து பல இடங்களில் கலவரங்களை தூண்டும் விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்
இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் யாசர் அராபத் தலைமையில் தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் SP பிரவீன் உமேஷ் டோங்ரேயிடம்கோரிக்கை மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment