பூக்களிலும் விஷம் உள்ளது

நமது  சிந்தனைக்கு !!!!!

மல்லிகைப்பூ என்பது நறுமணம் வீச கூடியது.  மல்லிகைப்பூ என்பது வெண்மை நிறம் என்றாலும் கூட அதனை நீங்கள் சுவைத்துப் பார்க்கும் பொழுது கசப்புத்தன்மை தான் வெளிவருகிறது.
ரோஜாப்பூ என்பது நல்ல மணத்தை வெளிப்படுத்தக் கூடியது. ஆனாலும் அதனை நீங்கள் சுவைத்து பார்த்தால் துவர்ப்புத்தன்மை தான் வெளியே வருகிறது.

ஒவ்வொரு பூவிலும் மது இருக்கிறது. அந்த மதுவை தான் மலர்கள் ஒரு வாசனையாக நறுமணமாக வெளியேறிக் கொண்டே இருக்கிறது.

 அதனை நாம் சுவாசிக்க இயலும் அது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.

அதுபோலதான் அந்த மலரில் இருக்கக்கூடிய மதுவை தேனீக்கள் உட்கொள்கிறது. உட்கொண்டு பிறகு இன்னும் அதிவேகமாக ஒரு மயக்க நிலைத்தன்மையுடன் சுழன்று கொண்டு இருக்கிறது.

மலர்களிலிருந்து வீசக்கூடிய நறுமணம் நமக்கு நல்ல சிந்தனையை கொடுக்கிறது. மலரை நீங்கள் மிகவும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அது மதுதான் ஆனால் அவை நமக்கு நல்லதுதான் செய்கிறது.

இதைப் போல ஒவ்வொரு அணுக்களிலும் நறுமணமும் உண்டு விஷமும் உண்டு.  அது எதனை வெளிப்படுகிறது என்பதுதான் மிக மிக முக்கியம்.

இதுபோல மனிதர்களுக்குள் நறுமணம் உண்டு.  விஷத் தன்மையும் உண்டு.

விஷத்தன்மை அதிகமாகும்போது மனிதருக்குள் இருந்து விஷத்தன்மை அவர்களை சுற்றி காற்றில் பரவுகிறது.  அதனை நுகரக்கூடிய மனிதர்களின் சிந்தனை மாற்றம் அடைகிறது.

நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை உள்வாங்கி கொள்கிறீர்களோ அப்படிப்பட்ட ஒரு தன்மைதான் உங்களுக்குள் இருந்து வெளியே வரும். நீங்கள் உங்களை மாற்றாத வரையில் இதனை மாற்ற இயலாது.

உங்களுக்குள் இருந்து வெளிப் படுகின்ற உணர்வலைகள் உங்களது வீடுகள் முழுக்க பரவுகிறது. அதனை சுவாசிக்க கூடிய உங்களது குழந்தைகள், மனைவி, தாய்மார்கள் அவர்களது சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுகிறது.  

அப்படி என்றால் எவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.  நமது சிந்தனையை மாற்ற வேண்டும். நல்ல உணர்வுகளை உள்வாங்க வேண்டும் அல்லவா.

உங்களது சிந்தனை உங்களையும் பாதிப்படைய செய்யும் மற்றவர் களையும் பாதிப்படைய செய்யும்.

சிந்தனை தான் மிகப் பெரியது. சிந்தனை தான் வளர்ச்சி அடைகிறது. மறுபடியும் பிறக்கிறது. 

சிந்தனை தான் உங்களை வழிநடத்தி செல்கிறது. சிந்தனை சரியாகும் போதுதான் ஞானம் பிறக்கும்.

ஞானம் பிறக்கும் போது தான் நாம் யார் என்பதை நாம் உணர இயலும்.

நன்றி!

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏